பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 329 இந்த இரண்டில் எதுவாயினும் சரி, ஆனால் ஏதாவதொன்றை உடன் தருவாயேல் இதுவோ, அதுவோ என்ற என் மனக் குழப்பம் தீருமென்ற கருத்தில் நின் குறிப்பறியேன் ஆதலால் பாவிடை ஆடு குழல்போல் கரந்து புரந்தது உள்ளம் (415) என்று பாடுகிறார். ஆசைப் பத்து அடிகளாருக்குத் தோன்றிய ஆசை இயல்பானது; எல்லை கடவாதது; எனவே, பெரும் பயன் விளைக்கக் கூடியது என்று இப்பதிகத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. அடிகளாரின் உடம்பிற்கும் கருவிகள், கரணங்கள் என்பவை உண்டு. உடம்போடு இயல்பாக அமைந்துள்ள இந்தப் பொறி புலன்கள், கரணங்கள் ஆகியவற்றை இன்ன இன்ன முறையில் செயல்படவிட ஆசைப்படுகிறேன் என்ற முறையில் அடிகளாரின் இப்பதிகம் அமைந்துள்ளது. மனிதனின் முக்கியப் பகுதிகள் என்று சொல்லப்படுபவை மனம், மொழி, மெய் என்ற மூன்றுமாம். இவற்றுள் அனைத்தும் அடக்கம், அடுத்து உள்ளது மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்துமாம். மெய் தவிர ஏனைய நான்கும் மெய்யுள் அடங்குமேனும் அவற்றின் தனித்தன்மை மிகப் பெரியதாகும். ஆகவேதான், உடம்பு என்று சொல்லும்போது, இந்த நான்கு தவிர, கை, கால் மார்பு என்பவற்றைக் குறிக்கின்றோம். அடிகளாரின் ஆசைப் பத்து, ஒவ்வொரு பொறிக்கும் ஒரு பணியைத் தந்து, அதில் அப்பொறி முழுவதுமாக ஈடுபடவேண்டும், வேறு ஒன்றிலும் நாட்டம் கொள்ளாமல் அந்த அந்தப் பொறிகளுக்கிட்ட பணியிலேயே முற்றிலுமாக ஈடுபடவேண்டும் என்று பாடுகின்றார். தி.சி.சி.IV 22