பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 331 திருப்பெருந்துறையில் குருநாதரை ஊனக் கண்ணாலேயே முதலிற் கண்டு ஈடுபட்டவர் அடிகளார். அதேபோலத் தில்லைக்கு வந்து கூத்தனைப் பார்த்தவுடன் 'உடையாள் நடுவுள் நீயிருத்தி (378) என்று பாடுமளவிற்கு ஊனக் கண் உதவியது உண்மைதான். திருக்கழுக்குன்றத்தில் கணக்கிலாக் கோலம் வந்து காட்டியதை ஊனக் கண்களால்தான் கண்டார். மனத்தாலோ, கற்பனையாலோ, உள்ளுணர்வாலோ அறிந்துகொள்ளுமாறு கணக்கிலாக் கோலம் காட்சி தந்திருப்பின் காட்டினாய்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க மாட்டார். எனவே, திருப்பெருந்துறை, தில்லை, திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று இடங்களிலும் கிடைத்த காட்சியை ஊனக் கண்களால்தான் கண்டார். இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு காண ஆசைப்பட்டேன்’ என்று வரும் பகுதிகளுக்குப் பொருள் கூறத்தொடங்கினால் அப்பாடல்களின் முற்பகுதிகளோடு இப்பொருள் பொருந்தாது போய்விடும். இக்கருத்தில் பாடல்களை இனிக் காணலாம். அத்தா காண ஆசைப்பட்டேன் ஆதலால் குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் கூவிக்கொள்ளாய் (419) என்றும், முத்தா உந்தன் முகவொளி நோக்கி முறுவல் நகை காண அத்தா சால ஆசைப்பட்டேன்’ (ஆதலால் அதற்கு இடையூறாக உள்ள இவ்வாழ்க்கை வைத்தாய்; எய்த்தேன் நாயேன்; இனி இங்கு இருக்ககில்லேன் இப்பிறவியை வாங்காய்' (423 என்றும், சிவபுர நகர்புக்குக் கடியார் சோதி கண்டுகொண்டு என் கண்ணிணை களிகூர. உன் பழ அடியார்கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன்’ (ஆதலால், அதற்கு இடையூறாகவுள்ள இந்த 'செடியார் ஆக்கைத் திறம் அற வீசி' (காக்க வேண்டும்) (426) என்றும் பாடுகிறார்.