பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இந்த முறையில் மூன்று பாடல்களையும் கொண்டு கூட்டுச் செய்து பொருள் கண்டால் ஊனக் கண்களால் காணும் காட்சியை அடிகளார் இப்பாடல்களில் குறிக்கவில்லை என்பதை நன்கு புரிந்துகொள்ளலாம். இவ்வளவு பெரிய உதவிகளைச் செய்த இந்த உடம்பையும் கண்ணையும் ஒரு சேர ஒதுக்கிவிட்டு, இந்த மூன்று பாடல்களிலும் பருத்தன்மை கடந்த நிலையில் குருநாதரைக் காண வேண்டும் என்று குறிக்கவேண்டிய காரனம் 6া6ষ্ঠা দুষ্ঠা ? ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்கிவிடும். குருநாதரைத் தரிசிக்க உதவிய கண்கள், கழுக்குன்றில் கணக்கிலாக் கோலத்தைக் காண உதவிய கண்கள், உதவி யது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த உதவியில் ஒரு பெருங்குறை இருந்தது. குரு தரிசனம், கணக்கிலாக் கோல தரிசனம் என்ற எதுவுமே நிலைத்திருக்கவில்லை. இவை இரண்டுமே கணப் பொழுதில் வந்து மறைகின்ற காட்சிகளாக அமைந்துவிட்டன. எனவேதான், கணப் பொழுதில் கிடைத்த ஆனந்தம், நீண்டு நிலைக்க வேண்டு மானால், அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. இந்த மூன்று பாடல்களிலும் நிலைபேறில்லாத காட்சிகளையும், அதனைத் தரும் உடம்பையும் ஒதுக்கிவிட்டு, உயிரளவில் நின்று நிலையாக இக்காட்சியைக் கண்டு களிக்க வேண்டும் என்கிறார். அதனால்தான் இந்த மூன்று பாடல்களிலும் 'உடலை நீக்கி’ என்ற கருத்துப் பேசப்பெறுகிறது. பதிகத்தின் மூன்று இடங்களில் சில நிலைகளைக் கண்ணால் காணவேண்டும் என்று பாடியுள்ளார். அப்படிக் காணவேண்டும் என்று பேசுவது இந்த உடம்போடு கூடிய புறக்கண்களால் அன்று என்ற கருத்து மேலே விரித்துரைக்கப்பெற்றுள்ளது.