பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 345 'பொத்தை ஊன் சுவர் புழுப் பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய்க்கூரை என்ற அளவிற்கு விரிவாக உடலைக் கேவலப்படுத்தி அடிகளார் பாடுகின்றார். அமைச்சராக இருந்த ஒருவர் மணிவாசகராக மாறும்போது வேறு உடம்பைப் பெற்றாரா? இல்லையே! இந்த உடம்போடுதானே அடியார் கூட்டத்தின் நடுவே இருக்குமாறு செய்தார் குருநாதர்? இந்த உடம்போடு ஒட்டிய தலையில்தானே குருநாதர் தம் திருவடிகளை வைத்துத் தீட்சை செய்தார்? அன்றியும் எற்புத் துளைதொறும் அமுத தாரைகள் புகுமாறு செய்தார்? “பொதுவினில் வருக என்று ஆணையிட்டபோது இந்த உடம்புடன்தானே வருக என்றார்: தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான், தானே வந்து எனது உள்ளம் புகுந்தான்’ (திருவாச:555) என்று பாடினாரே, அந்த உள்ளம் எங்கே இருந்தது? இந்த உடம்பினுள்தானே இருந்தது! "சிந்தனை நின்தனக்கு ஆக்கி (திருவாச:30) என்ற பாடலில் கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வாக்கு உன் மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர வந்தனை' என்று இவர்தாமே பாடியுள்ளார்? மேலே கூறிய அத்தனை இடங்களிலும் இந்த உடம்பால் பெற்ற பயன்களை விரிவாகக் கூறும் அடிகளார், திடீரென்று பொத்தை ஊன் சுவர் என்று பாடுவது ஏன்? இந்தப் பாடலின் இறுதியிலும், இப்பாடல் அமைந்துள்ள அதிசயப் பத்துப் பதிகத்தின் ஒன்பது பாடல்களிலும், ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே” என்று பாடுகிறார். ஆண்டுகொண்டது உண்மை; அடியரில் கூட்டியது உண்மை. யாரை? அடிகளாரைத்தானே! அப்படியானால் அடியரில் கூட்டுவதற்காக வேறு ஏதாவது ஒரு சரீரத்தைத் தந்தாரா? £1.5,6,IV 23