பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 353 ஆறாவது நிலையில் கிடப்பது என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம் நான் முற்றிலும் தொழிற்படாத நிலையைக் கூறியவ்ாறாயிற்று. அந்த நிலை எப்படி ஏற்பட்டது? புல்லத் தொடங்கி, பூண்ட நிலை வந்தவுடன் “நானின் செயற்பாடு முற்றிலுமாக அடங்கிவிடுகிறது. அதனையே கிடப்பது என்று கூறினார் அடிகளார். விறகு முதலிய அஃறினைப் பொருள் போட்ட இடத்தில் போட்டபடியே இருக்கின்ற நிலையைத்தான் கிடத்தல்' என்று சொல்கிறோம். ‘புரிந்து கொள்ளல் என்ற முதல் நிலையில் தொடங்கி, *புகுதல்’ என்ற இரண்டாம் நிலைக்குச் சென்று, நக்கும்; அழுதும் தொழுதும் உள்ள தன்னை மறந்த நிலையாக மூன்றாம் நிலையை அடைகிறது. இந்த நான்’. இந்த மூன்று நிலைகளில் ஏறுமுகத்தில் இருந்த இறைப் பிரேமை நான்கு, ஐந்து நிலைகளில் இறங்குமுகமாய்த் தொடங்கி, ஆறாவது நிலையில் தனக்கென்று ஒரு செயல் இல்லாமல் திருவடியைப் பூண்டு கிடக்கும் நிலையை அடைகிறது. புல்லப்பட்ட பொருள் விருப்பு-வெறுப்புக் கடந்து, இன்பம் துன்பம் கடந்து, தானே அதுவாயும், இணைந்தும் தனித்தும் இருப்பதாகலின் அதற்கு எந்த ஆனந்தத்திலும் ஈடுபடும் இயல்பு இல்லை. காரணம் அதுவே ஆனந்த சொரூபம் ஆதலின் தனியே ஆனந்தத்தில் ஈடுபடுவது இல்லை. புல்லுபவராகிய அடிகளாரைப் பொறுத்தவரையில் அவருடைய நான் கண்ணிர் வரும் நிலையில் தொடங்கி வரிசையாக வளர்ந்து, தன்னையே மறந்து ஆனந்த பரவசத்தில் திருவடிகளைப் பூண்டு கிடக்கும் நிலையை அடைகிறது. -