பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 411. பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை - கொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர்க் கடல்வாய்ச் சுழி சென்று மாதர் திரை பொரக் காமச் சுறவு எறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே 4 உலகிடைப் பிறந்தவர்கள் அனைவரும் துன்பப் புயல் வெள்ளத்தில் சிக்கினரேனும் அவர்களுள் அன்பர் பலர் இறைவன் திருவடியாகிய புணையைப் பற்றிக்கொண்டு உய்கதி அடைந்தனர். அந்தப் புணையைப் பற்றிக்கொள்ளாமல் பிறவிக்கடலில் மூழ்கிய யான், மாதர் என்னும் அலையால் மோதுண்டு, காமம் என்ற சுறாமீனிடம் அகப்பட்டு நைகின்றேன் என்றவாறு. 412. கருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து - இங்கு இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மைத் தடம் கண் வெருள் புரி மான் அன்ன நோக்கிதன் பங்க விண்ணோர் பெருமான் அருள் புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே 5 சுருள்புரிகூழையர்-கருட்டையான கூந்தலையுடையவர் இப்பாடலிலும் இறையருளை மறந்து, பெண்ணாசையில் சிக்குண்டு, அஞ்ஞானமாகிய இருள் நிறைந்த வாழ்க்கையில் சுழல்வதைக் கூறுகிறார். 413. மாழை மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர்த் தாள்