பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 a ಕೌguTಕಹರ - சில சிந்தனைகள் - 4 முதலாவதாக அடியார் கூட்டத்திடை இருந்தபொழுது கிடைத்த இறைப் பிரேமை, அனுபவம் மீட்டும் வேண்டும் என்று கேட்பதுதான் கோயில் மூத்த திருப்பதிகம். இரண்டாவதாக அதனை மறுபடியும் பெறவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்துவதுதான் ஆசைப் பத்தாகும். மூன்றாவதாக இந்த ஆசையைப்பற்றிப் பாடிக்கொண்டு வரும்போதே உள்ளுணர்வு, இதுவரை அவர் அனுபவித்த வற்றைப் புதிய ஒளியிலும், இதுவரை அவர் காணாதவற்றை ஒரு புதிய வடிவுகொடுத்தும் காட்டுகிறது. அதுவே அதிசயப் பத்தாகும். நான்காவதாக அதிசயப் பத்தில் கூறப்பெற்றவை எவ்வாறு தமக்குக் கிடைத்தன என்ற சிந்தனையில் ஆழ்ந்த அடிகளாருக்கு, ஒரு விடை கிடைக்கின்றது. அவனிடம் அடைக்கலம் புகுந்ததன் விளைவாகவே இச்சிறப்புக்கள் தம்பால் எய்தின என்ற அடிப்படையில் அடைக்கலப் பத்தைப் பாடுகிறார். ஐந்தாவதாக இந்த எண்ணம் வலுப் பெற்றவுடன் எப்படி மறுபடியும் அடைக்கலம் பெறுவது என்ற வினாத் தோன்றுகிறது. குருநாதர் மீட்டு வந்தால்தான் மறுபடியும் அடைக்கலம் பெறமுடியும். அது நடவாதபோது அடியார் கூட்டத்தை அடையவேண்டும் என்ற அவாத் தோன்றுகிறது. அதைக் குறுக்கே நின்று தடுப்பது இந்தப் பரு உடம்புதான் என்ற எண்ணம் வந்தவுடன், செத்து ஒழியவேண்டும் என்று நினைக்கின்றார், அதுவே செத்திலாப் பத்தாக மலர்கின்றது. ஆறாவதாக இவ்வுடலை நீத்துவிட்டு அவன் திருவடி அடைந்தால், அங்கே என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணத்திற்கு வடிவு கொடுப்பதே புணர்ச்சிப் பத்தாகும். அவன் திருவடிகளைப் புல்லிப் புணர்வது என்று கொல்லோ என்ற புதியதொரு ஆசை தோன்றி வளர்கின்றது, மேலே கூறிய இந்த ஆறு நிலைகளிலும் அந்தந்த நிலைகளில் நின்று பாடிய அடிகளார், இவை ஒன்றும் நடைபெறாமல் போகவே, தமக்கு இந்த வாழ்க்கையே