பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 361 வீணானவர், புதியவர் என்ற எந்தப் பொருளை வைத்துக்கொண்டாலும், தம்முடைய மனத்தில் வேறு எந்த இச்சைக்கும் இடமில்லை என்று பத்துப் பாடல்களிலும் எல்லையற்ற உறுதிப்பாட்டோடு அடித்துப் பேசுகிறார். மனம் என்ற ஒன்று, ஏதாவது ஒன்றைப் பற்றித்தான் நிற்கும். ஒரு குறிப்பிட்ட பற்றை நீக்கிவிட்டால், மற்றொன்றின்மேல் அம் மனம் தாவும். அதற்குப் பதிலாக, அதில் சென்று தங்கக்கூடிய எல்லாவிதப் பற்றுக்களையும் ஒருசேர நீக்கிவிட்டால், இறைவன் வந்து தங்கக்கூடிய இடமாக அது ஆகிவிடுகிறது. ‘அற்றது பற்று எனில் உற்றது வீடு' (நாலாயிர:2690) என்பது நம்மாழ்வார் வாக்கு. மற்று நான் பற்றிலேன் கண்டாய்” என்று பத்துப் பாடல்களிலும் கூறிவிட்டமையின் அந்தக் காலி இடத்தில் அவன் வந்து தங்கவில்லையானால் அதனால் வரும் கேட்டிற்கு அவனே பொறுப்பாகிவிடுவான். அதனை நினைவுறுத்துவது போலவே ஒவ்வொரு பாட்டிலும் பற்று நான் மற்றிலேன்' என்று பாடுகிறார். பற்றையோ ஒழித்தாகிவிட்டது; அதாவது, தாம் செய்யவேண்டிய கடமையை அடிகளார் நிறைவேற்றி விட்டார். அப்படியானால் வார்கடல் உலகினில் வாழ்கிலேன் கண்டாய் என்று எல்லாப் பாடல்களிலும் சொல்ல வேண்டிய காரணமென்ன? மிக நுணுக்கமானதும் சிக்கலானதும் ஆன ஒரு பிரச்சினையை மனத்துட் கொண்டே அடிகளார். இவ்வாறு பாடுகிறார். முன்னர்க் கூறியபடி மனத்தின் இயல்பை நன்கு அறிந்திருந்தால், அடிகளாரின் வேண்டல் தத்துவத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும். எவ்விதப் பற்றும் மனத்திலில்லை என்று உறுதியுடன் கூறிவிட்டார். ஆனால், ஏதாவது ஒரு பற்றைப் பற்றிக்கொண்டுதான் மனம் நிலைபெறும். இந்த நுணுக்கத்தை அடிகளாருக்கு அறுநூறு ஆண்டுகள் முற்பட்டு வாழ்ந்த வள்ளுவப் பேராசான், தி.சி.சி.IV 24