பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 369 கூறுவது ஒருபுறமிருக்க, மிகப் பெரிய அருளாளர்களுடைய வரலாற்றிலும் இச்செய்தி பேசப்பெறுகிறது. திருவாரூரில் பரவையை மணந்து அவரோடு இல்லறம் நடத்தும் நம்பியாரூரைச் சேக்கிழார் பெருமான், பரவை எனும் மெல் இயல்தன் பொன்ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வு ஆகப் பல் நாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார் (பெ.பு:தடுத்தாட்-18) என்று கூறியருளியமை காணலாம். 46 ஆம் பாடலில் ஒரு நயம் பேசப்பெற்றுள்ளது. கமல நான்முகனும் கார்முகில் நிறத்துக் கண்ணனும் முடியையும் அடியையும் இதோ கண்டுவிடுகிறோம் என்று தருக்கிப் புறப்பட்டபோது அவர்கள் முயற்சி வெற்றி பெற வில்லை. முயற்சி வெற்றியடையாதபோது, தருக்கிப் புறப் பட்ட தங்கள் பிழையை நன்கு உணர்ந்துகொண்டனர். இந்நிலையில் நண்ணுதற்கு அரிய விமலனே! எமக்கு வெளிப்படாய்' என்று வேண்ட, வியன் தழலிலிருந்து வெளிப்பட்டுக் காட்சி தந்தான். எனவே, தம் சிறுமையை உணர்ந்து வேண்டினால் அவன் வெளிப்பட்டே தீருவான் என்பது இங்குக் கூறப்பெற்ற கருத்தாகும். இதனை அடிகளார் கூறுவதன் நோக்கம் ஒன்றுண்டு. இதுவரை அவர் ஒலமிட்டு அலறியும் காணாத பொருள் திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் வெளிப்பட்டு அமர்ந்துள்ளது. அதனிடம் தம் குறைகளை வேண்டுகிறார். குருநாதர் பதிலொன்றும் கூறாமல் போகவே, எந்தாய்! நான்முகனுக்கும் நாரணனுக்கும் வெளிப்பட்டு அருள் செய்த நீ, அந்தளவு எனக்கு அருள் செய்யாவிடினும் என் குரல் கேட்டு அது என்ன என்றுகூடக் கேட்கக்கூடாதா? என்கிறார். . நேரம் காலம் பாராமல் குடங்கை நீரும் பச்சிலையும் கொண்டு பூசை செய்யப்பெற்றது ஒரு காலம்; குறவர்