பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மடமகள் கையில் கிடைத்த பூவை எடுத்துச் சென்று ஆலமர் செல்வனை வழிபட்டதாகச் சங்கப் பாடல் பேசுகிறது. ஐங்குறு: 259) இவற்றையெல்லாம் விட்டுச் சிவபூசை ஒரு சடங்காக எப்பொழுது மாறிற்று என்று தெரியவில்லை. நாளா வட்டத்தில் சிவ வழிபாட்டைவிடச் சடங்கும் சம்பிரதாய மும் முக்கியத்துவம் பெற்ற காலம் அடுத்துவரலாயிற்று. அக்காலத் தொடக்கத்தில்தான் மொட்டு அறா மலர் பறித்து இறைஞ்சும்’ (465) பழக்கம் வந்தது என்று நினையவேண்டியுள்ளது. மொட்டு விரிந்தால் அதில் தேனுண்ண வண்டுகள் வந்து அமரும் வண்டுகளின் எச்சில் பட்ட காரணத்தால் அந்த மலர் பூசைக்கு உதவாது என்று கருதியதால் மொட்டு அறா மலர் பறித்து வழிபாடு செய்யும் பழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்டது. இந்தச் சம்பிரதாயங்கள் பெருகி வளர்ந்த நிலையில் தாயுமானவப் பெருந்தகை இதன் மறுதலையாக, பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன் தாயு:கருணா6) என்று பாடியருளினார். எல்லாவற்றிலும் இறைவன் உடனாயும் வேறாயும் உள்ளான் என்று அருளாளர்கள் பாடுகின்ற காலத்தில், பூசனைக்கு வண்டு மொய்க்காத மலர் வேண்டும் என்று நினைத்தது விந்தையே ஆகும். இது அடிப்படையில்லாத வெறும் சம்பிரதாய வளர்ச்சியே ஆகும். இந்த நிலையில்தான் தாயுமானவர் போன்றவர்கள் குறிப்பாக இதனைச் சாடினர். இறையனுபவத்தில் திளைத்து இறைப் பிரிேமையில் மூழ்கிய அடிகளார். 'எனை நான் என்பது அறியேன், பகல் இரவாவதும் அறியேன் 6াধমdu/ பாடிய அடிகளார், "மொட்டறா மலர்பறித்து இறைஞ்ச என்று பாடுவாரா என்ற ”னா நியாயமானதே ஆகும். -