பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 391 (பகவான் கண்ணன் கூடவே இருப்பினும், தருமர் முதலியோர் பிராரத்துவ வினை காரணமாக 13 ஆண்டுகள் காட்டில் வாழும்போது கண்ணன் தலையிடவேயில்லை) அமைச்சராக இருந்து திருவாதவூரர் செயல் செய்யும் பொழுது இறைவன் அதற்குப் பொறுப்பாவதில்லை. திருப் பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பின்னர், மணிவாசகரின் உடல், பொருள், ஆவி அனைத்தும் கூத்தனிடம் ஒப்படைக்கப் பெற்றுவிட்டதாகலின் இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் மணிவாசகர் செய்த செயல்களுக்குக் கூத்தன் பொறுப்பே தவிர, அடிகளார் பொறுப்பில்லை. உருத் தெரியாக் காலத்து உள் புகுந்து ஊன் புக்குக் கருணையினால் ஆண்டு கொண்டான் எனினும், திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடைபெறுகின்ற அந்த விநாடிவரை அடிகளார் செய்த செயல், வினைக் கட்டுக்குள் அடங்கிய திருவாதவூரர் செயல்களேயாம். எல்லா உயிர்களையும் படைத்து, அவற்றின் உள்ளேயே அந்தர்யாமியாய் நின்று கருணை பாலித்து, இறுதியாக உயிர்களை ஆண்டுகொள்பவன் இறைவன். ஆதலால், தம்மைமட்டு மின்றி எல்லா உயிர்கட்கும் பொதுவான ஒரு கருத்தை இப்பாடலில் பாடியுள்ளாரோ என்ற ஐயம் ஏற்படும்பொழுது 'அது சரியன்று' என்பதை இப்பாடலிலுள்ள ஒரு சொல் வலுவாக நிறுவுகிறது. அந்த அற்புதமான சொல் 'என் உளம் மன்னி என்பதாகும். எனவே, இப்பாடலில் கூறப்பட்ட உயிர் அடிகளாருடையதே என்பது நன்கு விளங்குகிறது. புல் முதல் விலங்குவரையுள்ள உயிர்கள் ஐயறிவின. ஆதலானும், அவற்றுக்கு மனம் என்ற ஒன்று இல்லை ஆதலானும் இந்தப் பட்டியலிலிருந்து அவற்றை நீக்கிவிடலாம். அடுத்து, பல்வேறு இயல்புடைய மனிதப் பிறப்புகளுள் புகுந்து புறப்படுதல் ஒர் உயிருக்கு இயல்பு ஆதலால், வேறு