பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 393 அனைவருக்கும் இயலுகின்ற ஒன்றன்று; அடிகளாருக்கும் இது பொருந்துவதாகும். தம்முடைய பிறப்பை மிக இழிவானதென்று கருதி, நொந்து பல பாடல்கள் பாடியுள்ளார். கண்ட பத்திலும் அது அதிகம் இடம்பெறுகிறது. இந்த நிலையில் தாம் யார் என்பதை அறிந்துகொள்ள அடிகளாருக்கு ஒரு வாய்ப்புத் தர எண்ணினான் இறைவன். ஒரே விநாடியில் குருநாதரின் காட்சி கிடைத்ததுபோல், தாம் ιLlΙτή. என்பதை அறிந்துகொள்ள இறையருள் கைகூட்டியதால், திரும்பிப் பார்க்கிறார் அடிகளார். அப்பொழுது கிடைத்த காட்சிதான் உருத் தெரியாக் காலத்தே உள்புகுந்து உளம் மன்னிக் கருத் திருத்தி ஊன் புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட காட்சி. அக்காட்சியே தித்திக்கும் சிவபதமாக இனிப்பதை உணர்கின்றார் அடிகளார். இப்பின்னோக்குக் காட்சி மறைந்து, நடைமுறைச் சூழ்நிலைக்கு வந்தவுடன் அடிகளார் காண்பது, அவர் அப்பொழுது தங்கியிருந்த ஊராகிய தில்லையாகும். இறைவனருளால் கிடைத்த பின்னோக்குப் பார்வையால் தாம் அறிந்துகொண்ட பேருண்மையை மறப்பதற்குமுன், அதற்கு ஒரு வடிவு கொடுக்குமாறு கூத்தன் பணித்தான். அதன் பயனாகவே இப்பாடல் (47) தோன்றிற்று. எனவே, அணிகொள் தில்லையில் கண்டது கூத்தனையோ அன்றிக் குருநாதரையோ அன்று, தம்முடைய இந்தப் பிறப்பின் அறிய முடியாத இரகசியத்தை அறிந்துகொண்டதைத்தான் தில்லையிற் கண்டேனே என்று பாடுகிறார். - இந்த நினைவிலேயே அவர் வளர்ந்திருந்தால் திருவாசகம் வெளிவரவேண்டும் என்ற கூத்தனின் கருணைக்கு இடமில்லாது போயிருக்கும். ஆதலால், ஒரே விநாடியில் அடிகளார் உள்ளத்திலிருந்து இக்காட்சி மறையுமாறு செய்தான் கூத்தன். தி.சி.சி.IV 26