பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அறியப்பட்டதே. அதனைத் துறந்து ஆழ்வாராக ஆகியபொழுது தாம்பாடிய முதற்பாடலில் இதே கருத்தைப் பேசுகிறார். வாடினேன் (நாலா. 948) என்று தொடங்கும் பாடலில் வரும் பெருந்துயர் இடும்பையில் பிறந்து, கூடினேன், கூடியிளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி ஓடினேன்’ என வரும் பகுதி இக்கருத்துக்கு அரண்செய்யும். 415 மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா நின் மலர் அடிக்கே கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் நின் குறிப்பு அறியேன் பா இடை ஆடு குழல் போல் கரந்து பரந்தது உள்ளம் ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே 8 கும்பி- நரகம், கூவிடுவாய்-கூப்பிடுவாயாக. இப்பாடலில் அடிகளார் பயன்படுத்தும் உவமை சிந்திக்கற்பாலது. நெசவு நெய்கின்றவர்கள் பாவு என்ற பெயரோடு உள்ள நீண்ட நூலின் இடையே ஊடு என்று சொல்லப்படும் குழலை இடப்புறமும் வலப்புறமுமாகச் செலுத்தித் துணியை நெய்வர். பாவு என்று சொல்லப்படும் நீண்டுள்ள நூலுக்கும் அதனுடே இடப்புறமும் வலப்புறமும் செல்லுகின்ற குழலுக்கும் வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிகின்ற த்ொடர்பு எதுவும் இல்லை. என்றாலும் ஒருநூறு முறை இந்தக் குழல் இடப்புறமும் வலப்புறமும் சென்றுவந்தால் ஆடையில் இரண்டங்குலம் நெய்யப்பெற்றிருக்கும். மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை என்ற மூன்று ஆசைகளும் பாவு நூல்போல் நீண்டு கிடக்கின்றன. உள்ளம் என்னும் குழல் இம்மூன்று நூல்களுக்கும் இடையே குறுக்கும் நெடுக்குமாகப் புகுந்துபுறப்பட்டு வரவர நம்முடைய வினை நெய்யப்படுகிறது. நம்மையும் அறியாமல், நம் அதிகாரத்திற்குக் கட்டுப்படாமல்,