பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்! நீ யார்? நான் யார்? நீ உடையான்; நான்உன் உடைமை. நான் இப்படி அந்த ஆனந்தத்தை உண்ண முடியாமல் இருப்பதை, என் உடையானாகிய நீ பார்த்துக்கொண்டிருக்கிறாயே, இது உனக்கே அழகா? உன் கருணைக்கு அழகா என்று பேசியவர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். உடைமையாகிய நான், எனக்கு என்ன வேண்டும் என்பதை உடையவனாகிய உனக்கு உணர்த்தத் தேவையில்லை என்றுதான் இதுவரை எண்ணியிருந்தேன். இப்பொழுது புரிகிறது. என் நிலையை எடுத்துக்கூறி நீ அருள்செய்தே ஆகவேண்டும் என்பதை உனக்கு உணர்த்தாதொழிந்தது என் பிழைதான் என்கிறார். 'உடையாய் இதுவரை உனக்கு உணர்த்தாது ஒழிந் ததை இப்போது உணர்த்துகிறேன். என்னைச் சுற்றியுள்ள இருள் நீங்கவேண்டும் அந்த இருளை ஒளிபொருந்திய வாள் கொண்டு துணித்து அருள்செய்வாயாக’ என்கிறார். மெய்யடியார்களைப் போல இறைவன்மாட்டுச் செலுத்த வேண்டிய அன்பை அவனே தரவேண்டும் என்பதை 492 அம் பாடலின் மூன்றாம் அடியில் 'அன்பும் தாராய் என அவரே கூறுகிறார். அத்தகைய ஒர் அன்பை அவன் தந்துவிட்டால் அதனை வைத்துக்கொண்டு வளர்த்துப் பேரன்பாக மாற்றி, அவனை அடைய வேண்டியதுதானே வழி வழியும் தெரிகிறது; வழியிற் செல்வதற்குரிய உறுதுணையாக வேண்டப்படும் அன்பையும் கேட்டுப் பெற்றுவிட்டால் அமைதியடைய வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு, உடனடியாக உன் திருவடிகளைத் தா" (ஒல்லை வந்தருளித் தளிர் பொற்பாதம் தாராய்) என்று அடிகளார் கேட்டது ஏன்?.