பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்ற மூன்றையும் தனித்தனியே விரிவாகப் பாடியுள்ளவர் அடிகளாரே ஆவார். இப்படி, அனுபவத்தைத் திரும்பிப் பார்த்து அதுபற்றிப் பேசும்போது, இரக்க உணர்வு தோன்றுவது இயல்பேயாகும். அந்த இரக்க உணர்வும் இருவகைப்படும். அடடா, பெற்றதை இழந்துவிட்டோமே இனி எப்போது அது கிடைக்கப்போகிறது!’ என்று இரங்குவது ஒரு வகை. இரண்டாவது நிலை, இனி இந்த அனுபவம் என்றுமே கிடைக்கப்போவதில்லை என்ற கழிவிரக்கத்தில் தோன்றும் இரக்கமாகும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையொன்றும் உண்டு. இந்த நிலையில் உணர்விற்கு வேலை கொடுக்காமல், அறிவிற்கு ஓரளவு வேலை கொடுக்கின்றனர் இப் பெரியோர். அந்த அறிவாராய்ச்சியில் இந்த இன்ப அனுபவம் இழக்கப்பெற்றதற்கு ש_Iחrחr காரணம் ? கொடுத்தவனே அதை எடுத்துக்கொண்டானா? அல்லது தமது தகுதியின்மை, அஜாக்கிரதை காரணமாக அது போய்விட்டதா என்பன போன்ற வினாக்களுக்கு விடை தேடுகின்றனர். மேலே கூறிய மூன்று நிலைகளும் திருவாசகத்தில் மிகமிக அதிகமாக இடம்பெற்றுள்ளன. உயிருண்ணிப் பத்தின் முதல் பாடலில் (50) இந்த மூன்று நிலைகளும் இடம்பெறக் காணலாம். களித்தலும், இறுமாப்புக் கொள்ளுதலும் எந்நாளோ என்று கேட்டால் இவை முன்னரே அனுபவிக்கப்பெற்று இழக்கப்பெற்றவை என்பது நன்கு விளங்கும். கிடைத்து அனுபவிக்கப்பெற்ற ஒன்று கைவிட்டுப் போனமையின் மீட்டும் அது கிடைக்கும்நாள் எந்நாளோ என்று வருந்தும் நிலையும் இப்பாடலில் பேசப்பெறுகிறது.