பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 437 இல்லை. இந்தப் போலிகளைக் கண்டு ஆயிரக்கணக்கான வர்கள் ஏமாந்து இவர்களே உண்மைச் சைவர்கள் என்று நம்பி வணக்கம் செய்கின்றனர். இந்தப் போலிகளால் மக்கள் ஏமாறுகின்றனர். இவர்கள் செய்வதுதான் உண்மையான வழிபாடு என்று கருதுகின்றனர். ஆக, இந்தப் போலிப் பூசைக்காரர்கள் இறைவனையும் ஏமாற்று கிறார்கள்; தம் காலத்து உடன் வாழும் மக்களையும் ஏமாற்றுகின்றனர். அவர்கள் உள்ளே உள்ள இறைவன் அவர்களைக் கண்டு சிரிக்கின்றான், அந்தோ பரிதாபம், அந்த மக்கள் ஏமாறுகின்றனர்! * . பல்லவர் காலத்தில் தமிழகத்தில் சைவர்கள் குறைவாக இருந்திருக்க வேண்டும். அது நாவரசர் காலம். எட்டாம் நூற்றாண்டில் பாண்டி நாட்டில் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ்ச் சைவம் நன்கு வளர்ந்திருந்த காலம். இந்த வளர்ச்சிக்கேற்பப் போலிகளும் நிறைந்துவிட்டனர்போலும், பூசனை செய்யும் இந்தப் போலிகள் என்று கூறினால், பூசனை என்ற மிக உயர்ந்த சொல் இழுக்குப்பட்டுவிடும் என்ற காரணத்தால் இந்தப் பத்துப் பாடல்களிலும் பூசனை செய்பவர்கள் என்று கூறாமல் இப்போலிகளைத் தனியே எடுத்துப் பேசுகிறார். •. இந்தப் போலிகளின் மனத்தில் அன்பு மருந்துக்கும் இல்லை. கல்போன்ற இவர்கள் உள்ளத்தில் உருக்கம் என்ற சொல்லுக்கே இடம் இல்லை. இப்படிப்பட்டவர்களை மனத்துட் கொண்டு இப்பொழுது ஒவ்வொரு பாடலிலும் வரும் இவர்களைப்பற்றிய சொற்களை ஒரு கண்ணோட்டம் விடலாம். 'மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு அற்றிலாதவர் (55) என்றும், மற்றோர் தேவர் எத்தேவர் என்ன அருவராதவர் (517) என்றும், 'இனிது அருள் பருகமாட்டா அன்பிலாதவர் (518 என்றும், துளியுலாம் கண்ணராகி, தொழுது, அழுது, உள்ளம்