பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 439 அடுத்துள்ளது மற்றொரு பிரச்சினை. உண்மை அன்பர்கள், போலி அன்பர்கள் ஆகிய இருவருமே திருநீற்றை அணிகின்றனர். வெண்ணிறு அணிகிலாதவரைக் கண்டால்' என்பதற்குச் 'சைவசமயத்தைச் சேராத பிறரை' என்று பொருள் கூறுவது முற்றிலும் பொருந்தாததாகும். வெண்ணிறு அணியாத பிற சமயத்தவர்களின் அறியாமையைக் கண்டு இரக்கம் கொள்ளலாமே தவிர அச்சம் கொள்ளத் தேவையில்லை. அப்படியானால் திருநீறைப் பற்றி அடிகளார் கூறியுள்ள பகுதிகளை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருதல் நலம். தொழும்பரோடு அழுந்தி, சேவடி பரவி வெண்ணிறு அணிகிலாதவர் (320) என்று கூறியமையின் வெண்ணிறு அணிகின்றபொழுதும் அதற்கு முன்னும் நடைபெற வேண்டிய செயல்கள் இங்குக் குறிப்பிடப்பெற்றன. அடியார்களுடன் கூடியமையின் மனம் அவர்களிடைச் சென்று இறையுணர்வுடன் கலக்கின்றது. பரவி என்றமையின் வாயினால் அவன் புகழைப் பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற மொழித் தொண்டு பேசப்பெறுகின்றது. மனமும் மொழியும் ஒரு திசையில் செல்லுகையில் உடலளவில் வெண்ணிறு அணிதல் பேசப்பெறுகின்றது. அதாவது மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் திருவடியில் ஈடுபாடு பெற்று, வெண்ணிறு அணிந்ததனால் அந்த வெண்ணிறு பூசுபவரையும் அதனைக் காண்பவரையும் ஒரு படி உயர்த்தும், வெண்ணிற்றை இவ்வாறில்லாமல் அணிபவரைக் கண்டால், அடிகளாருக்கு அச்சம் ஏற்படுவதில் வியப்பொன்றும் இல்லை. மனம், மொழி, மெய் என்று மூன்றும் ஒருமுகப்பட்டு என்று கூறியதன் விளக்கமாக, 524ம் பாடல் அமைகின்றது. இங்குக் கூறப்பெற்றவர்கள் திருமுண்டம் திட்ட அஞ்சு கிறார்கள். ஏன்? திருமுண்டம் திட்டவேண்டுமேயானால் அதன் உடன் நிகழ்ச்சிகளாகச் சில செயல்கள் நடைபெற வேண்டும். அவையாவன: நீள்நிலா அணியினானை