பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 441 520ஆம் பாட்டில் சேவடி பரவி வெண்ணிறு அணிகிலாதவர் என்ற தொடர் முன்னர்க் கூறப்பெற்ற கருத்துக்கு அரண்செய்வதாக அமைந்துள்ளது. வெண்ணிறு அணிகிலாதவரைக் கண்ட அடிகளார் அஞ்சவில்லை. சேவடி பரவாமல், நெற்றியில்மட்டும் வெண்ணிறு அணியும் போலிகளையே சேவடி பரவி வெண்ணிறு அணிகிலாதவர்' என்கிறார். இத்தகைய போலிகள் சமுதாயத்தையே ஏமாற்றுபவர்கள் ஆதலின் அடிகளார் அஞ்சுகிறார். 'நையும் ஆள் அலாதவர் (52) என்ற தொடர் சிந்திப்பதற்குரியது. ஆள் அலாதவர் என்பது தம்மைத் தாம் ஆளும் திறமையிலாதவர் என்ற பொருளைத் தரும். இதனோடு சேர்ந்து நையும் என்ற சொல்லையல்லவா அடிகளார் சேர்த்துள்ளார் உள்ளம் நைதலுக்கும் ஒருவர் தம்மைத் தாம் ஆளும் தன்மைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்றால், தொடர்பு உண்டு என்றே சொல்லலாம். மனம், அதன் அடிப்பகுதியாகிய உள்ளம் என்ற இரண்டும் கல்போன்று கடினமாக இருப்பினும், நையும் இயல்பையும் உடன் பெற்றுள்ளன. அவற்றை நைவிக்க வேண்டுமேயானால் அவற்றைப் பெற்றுள்ளவர் தேவை ஏற்படும்பொழுது அவற்றை நைவிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும். அந்த அதிகாரம் பெற்றிருத்தலையே ஆளும் தன்மை என்கிறோம். ஆகவே, நையும் ஆள் அலாதவர் என்று அடிகளார் கூறுகிறார். தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பதும் (திருக்குறள்: 422) மெய்ப்பொருள் காண்பதும் அறிவு (திருக்குறள்: 423) என்றார் வள்ளுவர். இவற்றையல்லாமல் கற்றல், கேட்டல், சிந்தித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தல் அறிவின் பணி யாகும். அன்றியும் அனுமானம் முதலிய பிரமாணங்களைக் கொண்டு உண்மையை அறிவதும் அறிவின் தொழிலாகும். இத்தனை வழிகளில் எந்த ஒன்றை அறிவு பின்பற்றி யிருந்தாலும் உண்மையைக் கண்டிருக்க முடியும். இறைவன் ÉléléfilV 29