பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஆயிரக் கணக்கான எண்ணங்கள், காட்சிகள் என்பவை மனத்துள் வந்து போனாலும் அவற்றுள் ஒன்றுகூடச் சித்தத்தைச் சென்று தாக்குவது மிகமிக அரிதாகும். இதற்குக் காரணம் ஒன்று உண்டு. எந்த ஒரு காட்சியோ அல்லது எண்ணமோ மேல்சித்தத்தைத் தாக்கினால்கூட அது எளிதாக மறையாது. அடிச்சித்தம் வரை சென்றுவிட்டால், அதனைப் போக்குவது ஏறத்தாழ இயலாத காரியம். நீண்டகாலப் பயிற்சி, தியானம் என்பவற்றால் மனத்தி லுள்ள ஒன்றை மேல்சித்தம்வரை கொண்டுசெலுத்தலாம். இவ்வளவு பெருமுயற்சி செய்து மேல்சித்தம்வரை கொண்டு செலுத்தப்பெற்ற ஒன்றை அங்கே நிலைபெறச் செய்ய வேண்டுமானால், மேலே கூறிய பயிற்சி, தியானம் என்பவை தொடர்ந்து நடைபெறவேண்டும். அடிச்சித்தத் தின் நடைமுறை வேறுவகைப்படும். நீண்ட தூரத்திலுள்ள ஒர் ஊருக்கு இரயில், கப்பல் முதலியவற்றின் உதவி கொண்டு சில நாட்கள் விடாது பயணம் செய்து அந்த ஊரை அடையலாம். இந்த வழிகளை மேற்கொள்ளாமல் விமானம் மூலம் சென்றால் சில மணி நேரத்தில் அந்த ஊரைச் சென்றடைந்துவிடலாம். அட்டாங்க யோகத்தில் சொல்லப்படும் இயமம், நியமம் முதலிய வழிகள் நாம் மேலே கூறியவற்றுள் முதல்வழியைச் சேர்ந்தவை. - இவ்வழிகளை மேற்கொள்ளாமல் இறைவன் திருவருள் ஒன்றையே துணையாகக் கொண்டு புறப்பட்டால் எத்தனையோ பிறப்புக்களைக் கடந்து அடையவேண்டிய திருவடிகளை ஆறே நாட்களில் அடையமுடியும். இது விமானப்பயணம் போன்றது. இப்பொழுது மறுபடியும் மனம், மேல்சித்தம், அடிச் சித்தம் என்பவற்றிற்கு வருவோம். மனத்திலுள்ள எல்லா