பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலப் பத்து 37 தழங்கு அரும் தேன் அன்ன தண்ணி பருகத் தந்து உய்யக் கொள்ளாய் அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே 10 இப்பாடல் ஓர் உருவகமாக அமைந்துள்ளது. இங்கு வழங்குபவர், திருப்பெருந்துறையில் எழுந்தருளிய குருநாதர். வழங்குகின்றாய் என்றதால் தராதரம் பாராமல், பெறுவோருடைய தகுதி பாராமல் தன் கருணை ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு குருநாதர் அருளை வாரி வழங்கினார் என்பது பெறப்பெற்றது. வழங்குகின்றவர் தம் இயல்புக்கேற்ப அள்ளிக் கொடுக்கின்றார் என்றால், கொடுத்தலாகிய செயல், நற்பயன் விளைக்கவேண்டுமாயின் அதனைப் பெறுகின்ற பாத்திரம் அதற்குத் தகுதியுள்ள பாத்திரமாக இருத்தல் வேண்டும். வழங்கியவர் குருநாதர் என்றால், அதனைப் பெறுகின்றவர், சில விநாடிகள் முன்வரையில் திருவாதவூரராக இருந்து, இப்போது மணிவாசகராக மாறியவர். திருவாதவூரராக இருந்தபொழுது சில இயல்புகள் அவர்பால் இருந்தன. எந்த ஒரு பொருளையும் புதிதாகக் கண்டால், அதனை வாரிக்கொண்டு தனதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது சாதாரண மனித இயல்பு. அமைச்சராக இருந்த ஒருவருக்கு இந்த இயல்பு அதிகமாகவே இருந்திருக்கும். அந்த இயல்பின் அடிப்படை தம் நாட்டுக்காகவும் இருந்திருக்கலாம்; தம் ஆசையை ஒரளவு நிறைவேற்றிக் கொள்ளவும் இருந்திருக்கலாம். ஒர் அமைச்சர் என்றால் நாட்டின் வருவாயை அதிகப்படுத்துதல், சேமித்தல், பிறர் நாட்டை வென்று, அவர்கள் பொருள்களைத் தம் நாட்டிற்குக் கொண்டுவருதல் என்பன போன்ற எண்ணங்கள் இருத்தல் இயல்பே. அதுவும் சந்தர்ப்பம் வரும்பொழுது அவசர அவசரமாகச் சேகரித்துக்கொள்ள