பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 447 எண்ணங்களையும் அகற்றி, ஒரேயொரு எண்ணத்தை மட்டும் மேற்கொண்டு, அட்டாங்க வழிகளைப் பயன் படுத்தி, மனம் முழுவதும் அந்த ஒரே எண்ணம் நிலை பெறுமாறு பலகாலம் முயன்றால் அந்த ஒரு எண்ணம் ஒரளவு மேல்சித்தத்திற்கு இறங்கும். இறங்கினாலும் அதனை அங்கேயே நிறுத்துவதற்கு ஒரளவு முயற்சி தேவை. இதற்குப் பதிலாக, இறை அருளை வேண்டிப் பெற்றுக் குறிப்பிட்ட ஒர் எண்ணத்தை உட்புகுத்தினால், அந்த எண்ணம், மனம், மேல்சித்தம் என்பவற்றில் தங்காமல், அவற்றை ஊடுருவிக்கொண்டு நேரடியாகச் அடிச் சித்தத்தில் சென்று தங்கிவிடும். அப்படித் தங்கிய பிறகு, அந்த அடிச்சித்தத்தில் வேறு எந்த ஒன்றும் நுழைவதற்கோ தங்குவதற்கோ வாய்ப்பே இல்லை. அடிச்சித்தத்தில் இந்த ஒன்று நிரம்பிவிட்ட காரணத்தால் மேல்சித்தமும் மனமும் ஒரு வரன்முறைக்கு உட்பட்டுப் பணிபுரிய முடிவதில்லை. அடிச்சித்தம் நிரம்பியவர்கட்கும் நம்மைப்போலவே கண், காது, மூக்குப் போன்ற பொறிகளுண்டு. ஆனால், நாம் காணாத காட்சியை அவர்கள் கண் காணும்; நாம் கேளாத ஒலியை அவர்கள் காது கேட்கும். - இந்த முறையில் அடிகளாரின் அடிச்சித்தத்தில் குருநாதர் புகுந்து தங்கிவிட்டார். அதனால் அடிகளாரின் கண்கள் வேறு எந்த வடிவையும் காண்பதில்லை; வேறு எந்த வடிவையும் அவர் அடிச்சித்தம் ஏற்றுக்கொள்வ தில்லை. தாம் பெற்ற இந்த அனுபவ விளக்கத்தையே சேவகனார் ஒருவரை அன்றி, உருவு அறியாது என்தன் உள்ளமதே (52) என்று அடிகளார் பாடுகிறார். - சோதி வடிவினனாகிய அவன், தன்னை இன்னாரென்று இனங்காட்டும் கழுக்கடையைக் சூலப்படையை கைக் கொண்டு வெளிப்படாமல், குதிரைச் சேவகனாகவோ உடைப்பு அடைக்கும் கூலியாளகவோ, ஏன் குருந்த