பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மன்னனது சிவபோதத்தை உண்ட பிறகு என்ன நிகழ்ந்து தெரியுமா? அந்தப் பாண்டி மன்னன், கூற்றை வென்று, தன்னை ஆட்டிப்படைத்த ஐம்பொறிகள் என்னும் அரசர்களையும் வென்று இனிதாக அமர்ந்திருந்தான். இதனால் அறியப்படவேண்டியது ஒன்று உண்டு. குதிரைச் சேவகனிடம் கடிவாளத்தை மாறிப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் இருந்த பாண்டிய மன்னன் வேறு, பெற்றுக்கொண்ட பிறகு அங்கிருந்த பாண்டிய மன்னன் வேறு. அதாவது இந்நிகழ்ச்சிக்கு முன்னர் இருந்த பாண்டியன் கூற்றுவன் அதிகாரத்திற்கு உட்பட்டவன். அவன் பெரிய பாண்டிய மன்னனாயினும், அவனை ஆட்டிப்படைத்த ஐம்பொறிகள், அவனினும் மேம்பட்ட ஐந்து அரசர்களாக இருந்தமையின் அவன் இவற்றுக்குக் கட்டுப்பட்டவனாகவே இருந்தான். கயிறுமாறிய பிறகு இந்த இரண்டு நிலைகளும் மாறி, கூற்றையும், ஐம்புலக் கோக்களையும் வென்றவனாக மாறிவிட்டான். 'மனத்தில் தெளிவும் நெஞ்சில் உறுதியும் இல்லாமல் இரண்டாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்ற அப்பாவிகளே! குதிரைச் சேவகன் கைபட்ட கடிவாளத்தைக் கையில் வாங்கியதனாலேயே ஒருவன் கூற்றையும், ஐம்புலக் கோக்களையும் வென்றான் என்றால், இதனைக் கேட்ட நீங்கள் குதிரைச் சேவகனின் திருவடியை சிக்கெனப் பிடித்துக் கொள்வதே உய்கதி அடையும் வழி என்பதை அறிவீர்களாக என்றபடி, பிடித்த பத்து இறைப் பிரேமை என்ற இன்ப அனுபவம் ஏற்றத் தாழ்வின்றி ஒருபடித்தாய் இருக்கின்ற ஒன்றன்று. நான்', 'நான் அனுபவிக்கின்ற இன்பம்’ என்பதில் தொடங்கி,