பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 467 திருரசறவு “நின்னில் சிறந்தவை நின் நாமங்கள்’ என்று குறிப்பிடுகிறது ஒரு பழம்பாடல். குருவைவிடச் சிறந்தவை அவருடைய திருவடிகள் என்று நினைப்பதனால் போலும் இப்பகுதியின் ஐந்து பாடல்களில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். காட்டினை உன் கழல் இணைகள் (546) உன் கழல் கண்டே (547) உன் பாதமலர் காட்டியவாறு (548) வார்கழல் வந்து உற்று இறுமாந்து இருந்தேன் (550) மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருக (554) என்பவையே அத்தொடர்கள். இதுவரை நாம் கண்டுவந்த திருவாசகப் பாடல்களில் மிகப் பல இடங்களில் திருவடிப் பெருமை பேசினாரேனும் இந்த ஒரு பதிகத்தில் மட்டும் ஐந்துமுறை கூறியுள்ளது தனிச்சிறப்பு உடையதாம். முதற் பாடலில் (546) நின் கழல் இணைகளைக் காட்டி, கரும்பின் சுவையை நான் பெறுமாறு செய்தாய் என்று கூறவந்தவர், அந்தக் கழலிணைகள் காட்டப் பெறுவதற்கு முன்னர் என்ன நிகழ்ந்தது என்பதை முதலடியில் விரித்துக் கூறுகிறார். சாதாரண மனநிலையில் அத்திருவடிகளைக் கண்டிருப்பின் அவை இன்னாருடைய திருவடிகள்; மலர்போன்ற அழகுடைய திருவடிகள்; செம்மை நிறம் பொருந்திய திருவடிகள் என்ற எண்ணம் தோன்றி