பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 471 'சிறுதெய்வம்' என்று அடிகளார் பொதுவாகக் குறிப்பிட்டாரேனும் அது விஷ்ணு வழிபாட்டையும், காளி முதலிய சக்தி வழிபாட்டையுமே குறிப்பது ஆகும். பாண்டிநாடு பொதுவாகச் ճՃ)ՅՅ)1 சமயத்திலேயே திளைத்தது என்றாலும், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் காலத்தில் விஷ்ணு வழிபாடும் தழைத்து வளர்ந்தது என்பதை மறுக்க முடியாது. கண்ணகி காலத்திலிருந்தே சக்தி வழிபாடு பல வடிவங்களில் வளர்ந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. வரலாற்று அறிவு படைத்த அடிகளார். இதற்கு ஒரு முக்கியமான இடந்தராவிடினும் சிறுதெய்வம்' என்ற சொல்லால் சிறு தேவதைகளையும் 'பிறதெய்வம்’ என்ற சொல்லால் விஷ்ணுவையும் குறிப்பிடுகிறார். மனித மனம் பல்வேறு உணர்வுகளுக்குத் தாயகமாக இருப்பதாகும். அவற்றுள் சில வலுவானவை; சில மிகமிக வலுவானவை. இந்த மிகமிக வலுவான உணர்வுகளுள் பசி, சினம் முதலியவை அடங்கும், அவற்றுள்ளும் தலை தூக்கி நிற்பதும் எந்த நிலையிலும் போக்க முடியாததும் ஆகிய ஒர் உணர்வு பாலுணர்வே ஆகும். பசி, சினம் முதலியவற்றைக்கூடப் பயிற்சியினால் அடக்கி ஆள முடியும். ஆனால், பாலுணர்வைச் சொந்த முயற்சியால், பயிற்சியால் அடக்குதல் இயலாத காரியம். அதனைப் போக்கவேண்டுமேயானால் அதற்கு இரு வழிகள் உண்டு. ஒன்று, இந்த உடம்பு ஒழிய வேண்டும். இந்த ஒரு வழியைத் தவிர மற்றொரு வழியும் உண்டு. ஆனால், அது எல்லோருக்கும் இயல்வதொன்று அன்று. அந்தத் தலையாய வழிதான் திருவருளை வேண்டிநின்று அதன்மூலம் இப்பாலுணர்வைப் போக்குதலாகும்.