பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 473 'நான் அழிவதில்லை. ஆனால், சிவபெருமான் என்று தெருவுதோறும் அலறிக்கொண்டு செல்லவேண்டுமேயா னால் நான் முற்றிலும் அழிந்த நிலையிலேயே அது நடைபெறும். முன்னரும் நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ (திருவாச:252) என்றும், "பிணநெஞ்சே தேடுகின்றிலை தெருவுதோறலறிலை’ (திருவாச35) என்றும் பாடியுள்ளார் ஆதலின், இந்தப் புதுமையான வேண்டுகோள் அடிகளாரைப் பொறுத்த மட்டில் பழமையானதே ஆகும். திருப்புலம்பல் திருப்புலம்பல் என்ற தலைப்பில் உள்ள இந்த மூன்று பாடல்களும் எந்த இடத்தில் பொருத்தமாக அமையும் என்பதை நன்கு ஆராய்தல் நலம். முன்னர் உரை கண்ட பெரியவர்கள்கூட இது இருக்கவேண்டிய இடத்தை உறுதியாகக் கூற முன்வரவில்லை. 'திருப்படை எழுச்சிக்கு முன்னர் இது அமைந்திருத்தல் வேண்டும் என்று கூறுவோர்கள்கூட அதற்குரிய காரணத்தைக் கூறினார்களில்லை. என்னைப் பொறுத்தவரை இப்பகுதி அதிசயப் பத்தினை அடுத்து இருந்தால் பொருத்தமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. குருநாதர் தமக்குச் செய்த அருளையெல்லாம் நினைந்து, அவை தமக்குக் கிடைத்தது அதிசயத்திலும் அதிசயம் என்று சொல்லிக்கொண்டு வருவதன் பின்னர் இது அமைந்திருத்தல் பொருத்தமெனத் தோன்றுகிறது. இவ்வளவு அதிசயங்களையும் தமக்கு விளைவித்தது எது? குருநாதரின் திருவடிகளல்லவா? எனவே, அதிசயங்களுக்குக் காரணமான திருவடிகளை வாணாள் உள்ளவரை புகழ்வது பொருத்தமானதே என்றும், இந்த