பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 திடீரென்று அவருக்கு இவ்வளவு தூரம் அருள் செய்த அந்த விதி, இப்போது மறைந்துவிட்டது. ഖ്ള மறையும் பொழுது குருநாதர் உட்பட அனைவரும் மறைந்து விட்டனர். இவ்வளவு தூரம் அவருக்கு உதவிய விதி ஏன் இதனைச் செய்திருக்க வேண்டும்? அந்த நல்) விதி யின்மையால் குருநாதர் மறைவு முதலியன அனைத்தும் நடந்துவிட்டன. இவ்வளவு விரிவாக உருவகத்தில் பேசிய அடிகளார் விக்கிய அருளார் அமுதம் புறத்தே சென்றுவிடாமல் உள்ளே செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார். தொண்டையில் விக்கிய ஒன்று, உடலினுள் செல்ல வேண்டுமானால் தண்ணீர் ஒன்றுதான் அதனை உட்செலுத்தும். எனவே, உருவக அடிப்படையில் விக்கிய அருளார் அமுதம் உள்ளே செல்வதற்குரிய தண்ணிரை உணவு பரிமாறியவரே தரவேண்டும் என்று கருதினார். ஆகவே, தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்” என்றார். இங்குத் தண்ணிர் எனப்பட்டது யாது? அருளார் அமுதமே தொண்டையில் சிக்கிக்கொண்டது. அதை உள்ளே செலுத்தவேண்டிய தண்ணிரும் அதே அருள்தான் ஆகும். உலகிடைக் கிடைக்கும் நீர்போல் அல்லாமல் அருளையே தண்ணிர் என்று உருவகித்ததற்கேற்பத் தேன் அன்ன தண்ணிர்” என்று பேசுகிறார். தேனே மருந்தும் உணவும் ஆயினாற்போல, இறைவன் கருணையே, அமுதாகவும் தண்ணிராகவும் அமைந்தன. சாதாரணத் தண்ணிர் விக்கிய பொருளை உட்செலுத்தும்; வயிற்றை நிரப்பும். ஆனால், இறைவனுடைய "கருணை, தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர்" ஆகும். ஆருளை நாடிநிற்கும் ஆன்மாவின் வேண்டுதலை நிறைவேற்றுவதுடன், இத்தண்ணீர் அதற்கு உய்கதியையும் நல்குகிறது. இதனைத் தெரிவிக்கவே "தண்ணிர் தந்து உய்யக் கொள்ளாய்” என்றார். .