பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைப் பத்து 45 ஆட்கொள்ளப்பட்டவர் இப்பொழுது இருளில் இருந்து கொண்டு கூவுகிறார். இந்த நிலையில் குருநாதரின் கடமை என்ன ? ஆட்கொள்ளப்பட்டவரைக் கரைசேர்ப்பது அக் கடமையாகும். இரண்டு வழிகளில் இந்தக் கடமையை நிறைவேற்றலாம். திருப்பெருந்துறையில் முன்னர்ச் செய்ததுபோல, அடிகளார் இருக்குமிடம் வந்து அவர் விரும்பும் திருவடிகளை மறுபடியும் தந்திருக்கலாம். ஆனால், மறுபடியும் அந்தத் திருவடி கிடைத்தாலும், முன்போலவே கடிதில் மறைந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக இரண்டாவது வழியை அடிகளார் வேண்டுகிறார். இரண்டாவது வழி குருநாதர் இருக்கும் இடத்திற்கு அடிகளார் செல்வதே ஆகும். இப்பொழுது அந்தத் திருவடி இதற்கொரு வழிசெய்ய வேண்டும். அந்த வழி என்ன என்பதைத்தான் இங்கே வா’ என்ற தொடர் குறிக்கிறது. பாடலின் இரண்டாவது அடியில் (கழற்சேவடி என்னும் பொருளைத் தந்து இங்கு என்னை ஆண்ட" என்று வருவது நடைபெற்ற நிகழ்ச்சியைக் குறிப்பதாகும். ஆண்ட என்ற இறந்தகாலப் பெயரெச்சம் பொல்லா மணியே' என்ற பெயருடன் முடிவதால் தந்ததும் ஆண்டதும் பழைய நிகழ்ச்சிகள் என்பதைக் கூறினாராயிற்று. - தந்து ஆட்கொள்ளப்பெற்றதால் இதுவரை இல்லாத உரிமை அடிகளாருக்கு வந்துவிட்டது. அந்த உரிமையின் அடிப்படையில்தான் இங்கே வா’ என்று என்னை அழைத்துக்கொள் என்ற வேண்டுகோளை இறைவனிடம் சமர்ப்பிக்கின்றார். ஆனால், உண்மையில் சமர்ப்பிக்க வில்லை. என்னதான் உரிமை பெற்றாலும் இப்படியொரு வேண்டுகோளை இறைவனிடம் விண்ணப்பிக்க மனத்தில் தைரியம் வரவில்லை. எனவே, விண்ணப்பமாகச்