பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கூறத் தமக்கு உரிமையில்லை என்று உணர்கின்றார். எனவே, இது இயலாதபொழுது இதையாவது செய் என்று கேட்பதுபோல என் முகம் நோக்கி ஆ ஆ என்ன (ஐயோ பாவம் என்று நீ இரங்கிக் கூற அச்சொற்களைக் கேட்க ஆசைப்பட்டேன்’ என்கிறார். 'உடலைவிட்டு இந்த ஆன்மா சிவபுரம் செல்ல நீ வழிசெய்யவில்லை; அது போகட்டும் என் முகத்தைப் பார்த்து நீ இரக்கம் கொள்கிறாய் என்று நான் அறிந்துகொள்ள, ஆ ஆ என்று ஒரு வார்த்தையாவது நீ கூறக்கூடாதா? அப்படி 岛 கறுவதைக் கேட்க ஆசைப்பட்டேன்’ என்கிறார். - அடிகளாரின் ஆசை இம்மூன்று பாடல்களிலும் வெளிப்பட்ட முறையை மறுபடியும் ஒருமுறை நோக்குதல் நலம் இங்கே வா என்று அங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன்' என்றும் அடுத்து 'அப்பா காண ஆசைப்பட்டேன்' என்றும் என் முகநோக்கி ஆ ஆ’ என்ன ஆசைப்பட்டேன்’ என்றும் வருதலை ஒன்றாக வைத்துச் சிந்தித்தால், இந்த மூன்று வேண்டுகோள்களில் 5905 6Tŷp-@pââ gp@p (ascending and descending order) இருப்பதைக் காணலாம். முதற்பாடலை விட இரண்டாவது பாடலில் அந்த ஆசை வளர்ச்சியடைதலைக் காணமுடிகிறது. மூன்றாவது பாடலில் அந்த வளர்ச்சி தொடராமல் இறங்குமுகமாகச் செல்வதைக் காணலாம். இதிலுள்ள நயத்தை அறியவேண்டுமானால் முற்றிலும் இறங்குமுதமாக அமைந்துள்ள காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதிப் பாடலை நினைவுகூரலாம். இடர்களை ரேனும் எமக்கு இரங்காரேனும் படரும் நெறி பணியாரேனும் திருமுறை 11: 4-2)