பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைப் பத்து 49 என வரும் பகுதி இறங்குமுக வேண்டுதலுக்கு ஒர் உதாரணம். இறைவன் இடரைக் களைந்திருக்க வேண்டும்; அது செய்யாவிட்டாலும் என்மாட்டு இரக்கம் காட்டியிருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றாலும் இவ்வழியில் செல் (படரும் நெறி) என்றாவது சொல்லியிருக்க வேண்டும். இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு அடிகளாரின் பாடலுக்கு வந்தால், முகத்தைக் காண ஆசைப்பட்டவருக்கு முகத்தைக் காட்டியிருக்க வேண்டும். அதுதான் இல்லையென்றாலும் இங்கே வா’ என்று கூறியிருக்க வேண்டும். அதுதானும் இல்லையென்றாலும் "ஐயோ பாவம்' என்றாவது இரக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பாடல்கள் இந்த முறையில் அமைந்திருப்பின் இறங்குமுகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். 421. மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு இலி நடைக் கூடம் தொடர்ந்து எனை நலியத் துயர் உறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே உடைந்து நைந்து உருகி உன் ஒளி நோக்கி உன் திரு மலர்ப் பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் - கண்டாய் அம்மானே - - 4 “நடைக்கூடம் என்பது இடம்பெயர்ந்து செல்லும் ஒரு சிற்றில்லம் என்பதாகும். கூடம் (உடம்பு) தானே பெயர்ந்து செல்லும் இயல்புடையதன்று. கூடம் நட்க்கிறது என்றால், அந்தக் கூடத்தை நடக்கச் செய்யும் ஒன்று அதனுள் இருத்தல் வேண்டும். - - - நாம் ஏறிச்செல்லும் மோட்டார் கார், ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பெயர்ந்து செல்கின்றதென்றால்