பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 424. பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே பேர் ஆயிரமும் பரவித் திரிந்து எம் பெருமான் என ஏத்த ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 7 முன்னருள்ள ஆறு பாடல்களிலும் இவ்வுலகிடை வாழ விருப்பமில்லை, இந்த உடம்பை வைத்துக் கொண்டிருக்கவும் விருப்பமில்லை. எனவே, இந்த உடலையும், உலகத்தையும் விட்டு வந்து வாரா உலகம் புகுந்து உன் திருவடியை ஏத்தவேண்டும்’ என்று கூறிவந்த அடிகளார், இப்பாடலில் இக்கருத்துக்கு மாறான புதிய திசையில் செல்லுகிறார். ’பாரோர், விண்ணோர், பரவி ஏததும் பரனே! பரஞ்சோதி!' என்பது முதலடியாகும். நான்முகன், திருமால், விண்ணோர் ஆகியோர் போற்றுவதையே அதிகம் கூறிவந்த அடிகளார். இங்குப் பார்ோர் பரவி ஏத்தலுக்கு முதலிடம் தருகிறார். பரவி ஏத்தக் கூடுமேயானால் பாரினில் பிறந்து வாழ்வதிலும் தவறில்லை என்ற நினைவு தோன்ற, பாரோர் பரவி ஏத்தும் பரஞ்சோதி என்கிறார். இந்த இடத்தில் நாவரசர் பெருமானின் குனித்த புருவமும் (திருமுறை: 4:31-4) என்று தொடங்கும் பாடலில் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்ற பகுதி நினைவுகூரத் தக்கதாகும். மீட்டு வாரா உலகை (வீடுபேற்றைத் தருபவன் அவன் ஒருவனே என்பதைக் கூறவந்த அடிகளார், வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே' என்கிறார். அதிலும் ஒரு சிறப்பு உண்டு. மீட்டு வாரா உலகை அடைய