பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. அதிசயப் பத்து (முத்தி இலக்கணம்) இப்பொழுதுள்ள திருவாசகப் பாடல்களின் அமைப்பு முறையை ஏற்றுக்கொண்டு நூறு, ஐம்பது, இருபது என்ற முறையில் அவை வரிசைப்படுத்தப்பெற்றுள்ளன என்றே இதுவரை உரை கண்டவர்கள் கூறியுள்ளனர். அது ஏற்றுக்கொள்ளக்கூடியது அன்று என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். என்றாலும், ஏதாவது ஒரு முறையில் இதனை வைத்துத்தானே ஆகவேண்டும். அந்த அடிப்படையை ஒரளவு ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. செத்திலாப் பத்துத் தொடங்குவதற்கு முன்னுள்ள பகுதிகள் அடிகளார் பெற்ற அனுபவத்தையும், அது கைவிட்டுப்போன அவலத்தையும், அதனால் ஏற்பட்ட கழிவிரக்கத்தையும் நூற்றுக்கணக்கான பாடல்களில் கூறுகின்றன. செத்திலாப் பத்து இந்த முறையிலிருந்து ஒரளவு மாறுபடுகின்றது. எவ்வாறாயினும் அடியார் கூட்டத்திடைப் புக வேண்டும் என்ற பேரார்வத்துடன் தில்லைநகர் வந்த அடிகளாருக்கு அது நடைபெறாதபொழுது முற்றிலும் நம்பிக்கை இழந்த நிலை (despair) ஏற்படுகிறது. அந்த நிலையில்தான் 'செத்திடப் பணியாய் என்று பாடினார். ஆனால், சாவோ வரவில்லை. அதனைத் தருபவனும் விரைவில் தருவதாகத் தெரியவில்லை. எனவே, இந்த நம்பிக்கை இழந்த நிலையில் அவனிடமே (ԼՔ(Ա)