பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பத்து 69 ஆனால், இங்குச் சொல் செய்தவன், சொல்லின் பொருள் வடிவாக உள்ளவன்; ஆதலால், அவன் ஏதோ ஒன்றைச் சொல்லியவுடன் திருவாதவூரரின் காதுவழிச் சென்று அவர் மூளையை இயக்கிச் செயலைச் செய்ய வைக்கவில்லை. அதற்குப் பதிலாக, குருநாதர் திருவாயில் இருந்து வெளிப்பட்ட சொல் ஒரே நொடியில் திருவாதவூரரை மாற்றியமைத்துவிட்டது. சொல்லும் ஒன்றுதான், அதன் அளவும் சிறியதுதான், மிக துண்மையானதும்தான். ஆனாலும், அந்த மிகச் சிறிய சொல் ஒரே விநாடியில் பாண்டிய நாட்டு அமைச்சரை மணிவாசகராக ஆக்கிவிட்டது. பொதுவாகச் சொற்கள் பொருள் தரும் வகையில் எல்லோர்க்கும் ஒரு நிகரனவே. ஆனால், குருவின் சொல், சீடர்களின் ஆன்ம பக்குவம் நோக்கி அருளப்படுவன. ஒரே மந்திரமாயினும் ஆன்மாக்களின் பக்குவ வேறுபாட்டுக்கு ஏற்ப அமைக்கப்படுவன. எனவே, அவை சொல்லப் படுவன அல்ல; அவரவர்க்கு ஏற்பச் செய்யப் படுவன அடுத்து நிற்கும் தொடர் நுகம் இன்றி விளாக்கைத்து’ என்பதாகும். நுகம் என்று சொல்லப்படும் நுகத்தடியே இரண்டு எருதுகளை ஒன்றாக இணைக்க உதவும் கருவியாகும். இந்த நுகத்தடியில்லாமல் உழுதலைச் செய்தார் குருநாதர். விளாக்கைத்து என்பது உழுதலைக் குறிக்கும். நுகத்தடியும், இரண்டு எருதுகளை ஒன்றாக இணைக்கும் கயிறும் இல்லாமலே உழவுசெய்ததுபோல, தன் திருவடியையும் என்னையும் எவ்விதக் கயிறும் நுகத்தடியும் இல்லாமல் ஒன்றாக இணைத்துவிட்ட்ார் என்க. இணைத்தவர் உலகியலினின்று வேறுபடுத்தும் வகையில் தூக்கி) இருதயத்தினுள் முன்னரே இருந்த பொய் முதலியவற்றை அகலுமாறு உழவு செய்தார் என்க.