பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ச்சிப் பத்து 81 ஒருவனைச் சொல்லும் பொருளும் இறந்த சுடர்' என்று குறிப்பதில் தவறில்லை. நாத தத்துவத்திற்கு அப்பாலும் உள்ளான் என்று கூறும்போதே அந்த நாத தத்துவத்தில் கலந்து இப்பாலும் உள்ளான் என்பது விளங்கும். இதனைப் புரிந்து கொண்டால், சொல்லும் பொருளும் இறந்த சுடாை என்பதும் சொல்லிப் பரவும் நாமத்தானை என்பதும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை என்பதை அறிந்துகொள்ள முடியும். அயனும் மாலும் பரவி ஏத்தும் நாமத்தை உடையவன் என்று கூறியவுடன் அந்த நாமத்திற்குரியவன் என்று அவனை நாமத்திற்குள் கட்டுப்படுத்திவிடக்கூடாது என்று கருதிய அடிகளார். 'நாமத்தான்’ என்று சொல்லுக்குப் பிறகு 'சொல்லும் பொருளும் இறந்த சுடர்' என்கிறார். - . சொல்லும் பொருளும் இறந்த சுடர் என்றவுடன் நம்மால் அணுகமுடியாதது என்ற அச்சம் யாருக்கேனும் தோன்றுமானால் அதனைப் போக்குவான்வேண்டித் தம்முடைய அனுபவத்தைப் பின் இரண்டு அடிகளில் கூறுகிறார். மூலப்பொருளின் இயல்பு என்று எடுத்துக் கொண்டால், அந்த மூலப்பொருள் சொல்லும் அது குறிக்கும் பொருளும் கடந்ததுதான். ஆனால், தம்மைப் பொறுத்த அளவில் கடந்து நிற்கும் அப்பொருள் தம்முடைய அனுபவத்திற்குட் பட்டதாய், நெல்லிக் கனியாய், தேனாய், பாலாய் இனிமை பயந்தது என்பதை எடுத்துக்கூறுவதன் மூலம் நம்பிக்கையிழந்த மனித குலத்திற்கு நம்பிக்கையூட்டுகிறார். சொல்லும் பொருளும் இறந்த சுடர்-நெல்லிக் கனியாய், தேனாய், பாலாய் இனிக்கின்ற நிலைக்கு வரவேண்டுமானால் அதற்குரிய வழிமுறைகள் சில உண்டு.