பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ச்சிப் பத்து 83 உண்ணும் பொழுது క్రౌఢగ్రఢ அனுபவிக்கப்படுகிறது: உண்ணப்பட்ட பொருள் பின்னர் உடலுக்கு நலம் செய்கிறது. வேம்பும் கடுவும் அன்ன மருந்து உண்னும் பொழுது சுவை பயப்பதில்லை. ஆனால், அம்மருந்து உடலுக்கு நலம் செய்கிறது. ஆனால் தேன் உண்ணும் பொழுதும் சுவைபயந்து பின்னரும் நலம் செய்கிறது. அதுபோல മ്ലങ്ങുഖങ്ങ அமுதாக உள்ளான் என்றால், அவனுடைய திருப்பெயரும் கருணையும் சுவையாக அமைந்துள்ளன. இறைவனைப் பொறுத்த மட்டில் அவன் வேறு, அவன் பெயர் வேறு இல்லை. இவற்றை யெல்லாம் மனத்திற் கொண்ட அடிகளார் 'அமுது என்றும் 'அமுதின் சுவை” என்றும் பாடினார். அடிகளார் இயற்றிய திருக்கோவையாறில் சொற்பால் அமுது இவள் (திருக்கோணவ) என்று தொடங்கும் பாடல் இதற்கு விளக்க உரையாக விளங்குகிறது. அதாவது சொல்லுதல், பரவுதல், சொல்லின் பொருளை அறிய முற்படுதல் ஆகிய அனைத்தும் அறிவின் பாற்பட்ட செயல்களாகும். அந்த அறிவு தொழிற்படுகின்ற வரையில், அப்பொருள் வெளிப்படுவதும் இல்லை; எவ் விதச் சுவையையும் தருவதும் இல்லை. அறிவின் செயல் மங்க மங்க, உணர்வு வெளிப்பட்டுப் பணிபுரியத் தொடங்கும்போது, சொல்லும் பொருளும் மறைந்து சுவை ஒன்றுமட்டுமே எஞ்சி நிற்கின்றது. ‘புல்லிப் புணர்வது” என்றது பருவடிவாகவுள்ள இவரது உடலும் குருவின் திருவடியும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இணைபிரியாது நிற்பதையே குறிக்கும். இதனையே தாடலை (தாள்தலை என்பர். -