பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 442. திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும் அகழப் பறந்தும் காணமாட்டா அம்மான் இம் மா நிலம் முழுதும் நிகழப் பணி கொண்டு என்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மை எல்லாம் புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 5 தலைவன்(அம்மான்) இந்நிலவுலகம் முழுதும் அறியும் படியாக தம்மைப் பணிகொண்டான் என்று கூறிவிட்டு, அடுத்து ஒரு விருப்பத்தையும் வெளியிடுகின்றார். குருநாதர் பெருந்துறையில் தம்மை அடிமை கொண்டார் என்பதை வியந்து கூறிய உலகம், வியப்பு மேலிட்டால், 'அடிகளார் பொல்லா மணியாகிய தலைவனைப் புணர்ந்து, அவன் திருவடிகளிலேயே தங்கிவிட்டார். ஆகா, இஃது என்ன புதுமை!’ என்று புகழ்ந்து பேசும் நாள் என்றோ என்று தம் விருப்பத்தை வெளியிடுகின்றார். 443. பரிந்து வந்து பரம ஆனந்தம் - பண்டே அடியேற்கு அருள் செய்யப் பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன் என்று என்று சொரிந்த கண்ணி சொரிய உள் நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பாய்ப் புரிந்து நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மனிப்ை புணர்ந்தே - 6 'முன்னொரு சமயத்தில் என்பால் பரிவு கொண்டு வந்து பரமானந்தத்தைக் தந்தார் குருநாதர். அவ்வாறு அருள் செய்த குருநாதரைப் பிரிந்து பெரிதும் திகைத்து நிற்கின்றேன். இந்த நிலைமை நீங்கி, கண்ணிர் ஆறாய்ச்