பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ச்சிப் பத்து 85 சொரிய, இறைவனுக்கு அடிமை பூண்டு அவன் இட்ட பணியைப் புரிந்து நிற்பது என்று கொல்லோ?’ என்கிறார். 444. நினையப் பிறருக்கு அரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் தனை ஒப்பாரை இல்லாத் தனியை நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டம் கணையக் கண்ணி அருவி பாயக் கையும் கூப்பிக் கடி மலரால் புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 7 'ஐம்பூதங்களில் வெளிப்பட்டு நின்றும், தனக்கு உவமை என்று சொல்லக்கூடிய எதுவும் இல்லாத, பொல்லா மணியைக் கூர்ந்து நோக்கி, உடல் பூரித்து (தழைத்து, தழு தழுத்த நாவுடன் சொற்கள் குழறிவர, கண்களில் நீர் அருவிபோலப் பாய, கூப்பிய கையுடன் கடி மலரால் புனைவது என்றோ?' என்பதாம். 445 நெக்கு நெக்கு உள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்துப் புக்கு நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 8 பாடலின் மூன்றரை அடிகளில், கூறப்பெற்ற செயல்கள், முன்னர் நாம் குறிப்பிட்ட இறைப் பிரேமை (divine ecstasy) orgârl 1367 (p(up Glouarfi'il Isru Tôlb. இச்செயல்கள் ஒன்றையொன்று அடுத்தோ அல்லது ஒரு