பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ச்சிப் பத்து 87 தாதை ஆகிறான். தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமாய் நிற்றலின் அவனே தாயாகிறான். இவர்களால் படைக்கப்பட்ட உயிர்கள், அவர்கள் கருணை காரணமாக இப்பிரபஞ்சத்தில் தத்தம் விருப்பம்போல் வாழ்கின்றன. இவற்றுள் இறப்ப உயர்ந்தவையும், இறப்ப இழிந்தவையும் உள்ளன என்பது வெளிப்ப்டை இந்நிலையில் அந்தத் தாதை, தான் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு, எங்கோ ஓர் இடத்தில் சென்று தங்கி, யாரோ ஒருவரைப் பிடித்து ஆட்கொள்கிறான் என்றால், ஆட்கொள்ளப்பட்டவருக்குப் பிறரிடம் காணப்படாத பல சிறப்பியல்புகள் இருந்தே தீரல் வேண்டும். அப்படி ஆட்கொள்வதற்கு எவ்விதத் தகுதியும் இல்லாத ஒருவரை, அவன் வந்து ஆட்கொண்டான் என்றால், அது சிந்திக்க வேண்டிய விஷயம். முதலில் இவரிடம் ஆட்கொள்ளப்பெறும் தகுதி உள்ளதா என்று ஆராயவேண்டும். தகுதி இல்லாவிட்டா லும், தகுதிக்குறைவான பகுதிகளாவது இல்லாமல் இருத்தல் வேண்டும். நாயேன்” என்று அடிகளார். தம்மைக் கூறிக்கொள்வதால் வேண்டத்தக்காத தகுதி தம்பால் இன்மையும், வேண்டத்தகா தகுதி தம்பால் உள்ளமையும் மிகுந்திருந்தன என்கிறார். அப்படிப்பட்ட ஒருவரைத் தேடிப்பிடித்து ஒருவன் ஆட்கொண்டான் என்றால் அதனை எவ்வாறு நியாயப்படுத்தவது? ஆனால், இது நடைபெற்றது என்னவோ உண்மை. இப்படித் தரக் குறைவான ஒரு செயலைச் செய்த ஒருவனை, முற்றறிவன் என்று கூறுவது சற்றும் பொருந்தாது. முற்றறிவு இல்லா விட்டால் போகட்டும்; சராசரி அறிவிருந்தால்கூட ஆண்டு கொள்வதற்கு முன்னர் ஆளப்பெறும் பாத்திரத்தின் தகுதியை ஆராய்ந்து இருக்கலாமே! ஆகவே, சராசரி அறிவும் இல்லாத அவனைப் பேதாய்' என்று அடிகளார் கூறுவதில் வியப்பொன்றும் இல்லை.