பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பேதாய்’ என்று இங்கு வழங்கப்பெற்ற சொல் இறைவனுடைய எளிவந்த தன்மைக்கு (ஸ்ெளலப்பியம்) எடுத்துக்காட்டாகும். 447. காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனை ஆண்ட பார்ப்பானே எம் பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் பூப் போது அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 10 மூப்பாய் - உயர்ந்து நிற்பவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களை என்றும் செய்துகொண்டிருக்கின்ற இவனை, எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் மூத்தோன் என்று சொல்வது சாலப் பொருத்தமுடையதாகும். 'மூவா முதலாய் நின்ற முதல்வா என்ற தொடர் எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் முன்னையவன் என்ற பொருளைத் தரும். . அந்தண வடிவுகொண்டு குருவாய் இருந்து அருள் செய்தமையால் பார்ப்பானே' என்கிறார். - பூப்போது அணைவது என்றுகொல்லோ என்பது 'உன் திருவடி மலரை வந்து அணைவது எந்நாளோ? என்றபடி, ;