பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. குலாப் பத்து |அனுபவம் இடையீடு படாமை) இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் 'குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே என்று முடிவதால், குலாப் பத்து என்று பெயரிட்டனர். இதுவரை பல இடங்களிலும் தமக்குக் குருநாதர் அருள்செய்ததாகவும், அவர் வந்து தம்முள்ளே தங்கிவிட்டதாகவும் பாடிவந்துள்ளார் அடிகளார். இம்முறையினின்றும் மாறுபட்டு, பிகண்ட பத்துபீ அமைக்கப் பட்டிருத்தலைக் காணமுடியும். கண்ட பத்தின் ஐந்தாம் பாடல் (479) சாதி, குலம், பிறப்பு என்பவற்றில் சிக்கியிருந்த தம்மை விடுவித்ததோடு யான், எனது என்பவற்றையும் மாய்த்தான் எனப் பேசுகிறது. அத்தகைய ஒருவனைப் பல இடங்களிலும் தேடிவந்து விளக்கம் பொருந்திய குலாவு) தில்லையில் கண்டேன் என்று கண்ட பத்தில் குறிக்கின்றார். காணுதல் ஆகிய செயலுக்கு அடிகளாரே கர்த்தா ஆவார். கண்ட பத்துப் பாடல்களில் காணப்படும் செய்திகள் தில்லைக்கு வருமுன்னரே நடைபெற்றுவிட்டன என்றால், அதன் பொருளென்ன? 'குருநாதர் வடிவிலிருந்து இந்த அற்புதங்களை நிகழ்த்திய ஒருவரை மறுபடியும் காணவேண்டுமென்று அலைந்துகொண்டிருந்தேன். தில்லைக் கூத்தனைக் கண்டபோது எனக்கு இத்தனை நலங்களைச் செய்த அந்தக் குருநாதரைத் தில்லையில் கண்டேன்' என்று கூறுகிறார். அதாவது, தில்லையில் இறைவன், கூத்தன் வடிவில் எழுந்தருளியிருப்பினும், அடிகளாரைப் பொறுத்தமட்டில் தமக்கு அருள்செய்த குருநாதரைத் "தில்லையில் கண்டேன்’ என்று கூறுகிறார். கண்ட பத்துப்