பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாத்திரைப் பத்து_91 விடை கூறுகிறேன். இந்தப் பொறிபுலன்களையும் மனத்தையும் செலுத்துவதற்கு ஒரு வழியுண்டு. மிகுதியாக நாகங்களை அணிந்துள்ள பெருமானுடைய திருவடிகளை ஓயாது (மிகவே) நினையுங்கள். அப்படி ஒயாது நினைக்கத் தொடங்கினால், இந்தப் பொறி புலன்களும் அப்பணியில் ஈடுபடும். சாதகர்களே! இவ்வளவு செய்தும் இந்த உலகிடை இந்த உடம்போடு வாழ்கின்ற காரணத்தால் உம்மை அலைக்கழிக்கக்கூடிய எத்தனையோ நிகழ்ச்சிகளும் பொருள்களும் உமக்கு எதிரே வரும். அவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் പ്പു തബ வந்தவழியே போமாறு விட்டுவிடுங்கள். இந்த வழிகளைத் தவறாமல் மேற்கொள்வீர்களாயின், வான் விட்டு இம்மண்ணிடை வந்தவன், உமக்கு அருள் செய்வான்’ என்றபடி, 607. தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதி வகையும் யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போகக் கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு போம் ஆறு அமைமின் பொய் நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே 3 சாதகர்களைப் பொறுத்தமட்டில் அவர்களை முன்னேற விடாமல் செய்யும் தடைகள் இரு வகைப்படும். முதல் வகை. அவர்களுடைய உடலை ஒட்டிய பொறி புலன்கள், மனம் என்பவையாம். இவற்றை முந்தையபாட்டில் கூறினார். இந்தப் பாடலில் இரண்டாவது வகைத் தடைகளைப்பற்றிக் கூறுகிறார். சாதகன் ஒருவழியை அமைத்துக்கொண்டு பொறி புலன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவ்வழியில் செல்ல முற்படும்போது, சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள்