பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92- திருவாசகம் சில சிந்தனைகள்-5 சாதகனை முன்னேற விடாமல் தடைசெய்யும். இந்த வயதில் பிள்ளை குட்டிகளுக்கு நீ செய்ய வேண்டிய பணிகள் உள்ளன; அவற்றை விட்டு இத்துறையில் நீ போவது சரியில்லை’ என்று சுற்றம் தடுக்கும். அவர்கள் கூறும் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, சிலகாலம் கழித்து இவ்வழி போகலாம் என்று மனத்திடைத் தோன்றும் எண்ண ஓட்டங்களை விதி வகை என்கிறார் அடிகளார். எனக்கு நானே இந்தச் சட்டதிட்டங்களை அமைத்துக்கொள்கிறேன்’ என்று பேசும் சாதகர்களை அடிகள் எச்சரிக்கிறார். 'உனக்குச் சுற்றம் என்பது நீதான்; உன் செயற்பாடுகளை எவ்வாறு செய்யவேண்டும் என வழி வகுத்துக் கொள்பவனும் நீயேதான் என்கிறார். தன்னையன்றித் தனக்கென்று ஒரு சுற்றம் இல்லை; சிறந்த வழியென்று கண்டு அதிற்செல்லும் முறையை வகுத்துக்கொண்டு அதன் வழி நிற்றலே சிறப்புடையதாகும். இந்த இரண்டும் நடைபெறுவதற்கு முன்னர், யாம் ஆர்? என்ற வினாவிற்கு, சுற்றத்தார் எழுந்து நின்று நீ இத்தகையவன், இன்ன பதவி வகிப்பவன், உன்னை ஒத்தாரும், மிக்காரும் யாருமில்லை’ என்று கூறி, தற்போதத்தை வளர்த்தனர். இந்த யான் வலுப்பெற்று விசுவரூபம் எடுத்தபோது உலகிடைக் காணப்பெறும் அனைத்துப் பொருட்களும் “எமது (எம்முடையது) என்ற எண்ணம் வலுப்பெற்று விடுகிறது. இந்த “யானும் எமதும் இவ்வளவு விரிவாக வளர்ச்சியடைவதற்குக் காரணம், உயிர்மாட்டும், பொருள்கள்மாட்டும் நாம் கொண்டுள்ள பற்றேயாகும். உயிருக்கும் உலகிலுள்ள பொருள்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எவ்வளவு எடுத்துக்கூறினாலும் இப்பாச உணர்வு எளிதில் நீங்குமாறில்லை. இது ஒரு மயக்கம். தாமே தமக்குச் சுற்றம் என்பதை உணர்ந்தவர்கட்கு இந்த மயக்கம் இருப்பதில்லை. அந்த