பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாத்திரைப் பத்து_93 மயக்கம் நீங்கியபொழுது, நான் யார் என்ற கேள்விக்கு நான் இறைவனுடைய அடிமை, உடைமை' என்ற பொருள் வந்துவிடுகிறது. மயக்கம் ஏற்படுவதற்கு முன்னர் நான் இன்னான்’ என்று பெருமைப்பட்டவர்கள் மயக்கம் தீர்ந்ததும் தாம் ஒருவனுடைய உடைமை என்ற முடிவிற்கு வருகின்றனர். தாமே தமக்குச் சுற்றம் என்பதை உணர்ந்து அகங்காரம், மமகாரங்களை விட்டு மயக்கம் தெளிந்தவர்கள், புறப்படச் சித்தமாக இருங்கள் (பொன் அடிக்கே போமாறு அமைமின்) என்றபடி 608. அடியார் ஆனிர் எல்லீரும் அகலவிடுமின் விளையாட்டைக் கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இருமின் திருக் குறிப்பைச் செடி சேர் உடலைச் செல நீக்கிச் சிவலோகத்தே நமை வைப்பான் பொடி சேர் மேனிப் புயங்கன் தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே . 4 'அடியார்கள் ஆகும் நிலையை ஒரளவு அடைந்துவிட்ட சாதகர்களே! இப்போது உங்கள் எதிரே ஒரு தடை வந்து நிற்கும். மேலோட்டமாகப் பார்க்கும்போது அது தடையென்று தெரியாது. தாமே தமக்குச் சுற்றம் என்பதை உணர்ந்து தாம் செல்லவேண்டிய வழிகளை வகுத்துக்கொண்டு, மயக்கத்தினின்றும் நீங்கி, முன்னேறி வருகின்ற உங்களுக்கு இப்பொழுது எதிரே நிற்பது, தடையென்று தெரிவிக்காமல், விளையாட்டு என்ற முறையில் அது தன்னை அறிவிக்கும். இது விளையாட்டுத்தானே! இதில் புகுந்து பங்குகொண்டால் அது என்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என்று நினைந்து அதில் ஈடுபட்டுவிடாதீர்கள். பற்றோ பாசமோ இன்றி மகிழ்ச்சியான