பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ல் திருவாசகம் சில சிந்தனைகள்-5 பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டில் ஈடுபடுகிறேன் என்று நினைப்பீர்களேயானால், வெள்ளத்தில் ஏற்படும் சுழல்போல் இந்த விளையாட்டு உங்களையே ஏய்த்துவிடும். எனவே அதனைப் புறந்தள்ளுக’ என்கிறார். 'இவ்வாறு செய்தால் சாதகர்களாகிய நீங்கள் அடியார்களாக மாறும் நிலை எளிதாகக் கைகூடும். அடியார்களாக ஆகிவிட்ட பிறகு அவன் திருவடி நினைவோடு, அவன் திருக்குறிப்பு என்ன என்பதை அறிய விழிப்போடு இருப்பீர்களாக அப்படி இருப்பீர்களானால் முதலில் உங்களைச் சிவலோகத்தில் சேர்ப்பான். அடுத்து அவன் திருவடிகளில் புகச்செய்வான். அதுவே வீடுபேறாகும்’ என்றபடி 609. விடுமின் வெகுளி வேட்கை நோய் மிகவே காலம் இனி இல்லை உடையான் அடிக்கீழ்ப் பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின் அடைவோம் நாம் போய்ச் சிவபுரத்துள் அணி ஆர் கதவு அது அடையாமே புடைபட்டு உருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே 5 மாபெரும் தவங்கள் செய்த துர்வாசர் போன்றவர்களும் வெகுளியை விட்டு நீங்க முடியவில்லை. "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி குறள்:800) என்றார் வள்ளுவரும். எனவே, சிவலோகத்தில் புகுவதற்கு காத்துக் கொண்டிருக்கும் அடியார்கட்கு அகப்பகையாக உள்ளே நிற்பது வெகுளியாகும். இது குணம் என்னும் குன்று ஏறி நின்றார். வெகுளி (குறள்: 29, யாகும். இந்த வெகுளியால் தாக்கப்பட்டவர் அழிவது திண்ணம். ஆனால், அதே நேரத்தில், இந்த வெகுளி தம்பால் தோன்ற இடம் கொடுத்தவர்களும் பல படிகள் கீழே இறங்க நேரிடும்.