பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96- திருவாசகம் சில சிந்தனைகள்-5 எவ்வளவு உயர்ந்தவராயினும் தனித்து இருக்கும்பொழுது மனத்திற்கு வலுக் குறைவும் தளர்ச்சியும் ஏற்படுவது இயற்கை அத்தகைய நேரங்களில் தம்மைப்போன்ற அதிர்வுகளுடையவர்கள் உடன் இருப்பார்களாயின் இந்தத் தளர்ச்சி உடனே நீங்கிவிடும். இந்த நுணுக்கத்தைத்தான் 'பெருஞ்சாத்தோடு (சிவபுரம் போவதற்கே ஒருப்படுமின்’ என்கிறார் அடிகளார். புத்தருடைய மூன்று மந்திரங்களில் ஒன்றான சங்கம், சரணம், கச்சாமி என்பதும் இதுபற்றி எழுந்ததேயாகும். 610. புகழ்மின் தொழுமின் பூப் புனைமின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு இகழ்மின் எல்லா அல்லலையும் இனி ஒர் இடையூறு அடையாமே திகழும் சீர் ஆர் சிவபுரத்துச் சென்று சிவன் தாள் வணங்கி நாம் நிகழும் அடியார் முன் சென்று நெஞ்சம் உருகி நிற்போமே 6 இப்பாடலின் முதலடியில் அடியாரானவர்கள் ஒரு நிலை அடைந்து விட்டோம்’ என்ற திருப்தியோடு இருத்தல் ஆகாது; மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒரு பொருள்பற்றியே ஈடுபட வேண்டும் என்று கூறுகிறார். "புயங்கன் தாளே புந்திவைத்திட்டு’ என்பதால் அவன் திருவடிகளை புந்தியில் பதித்திக் கொள்ள வேண்டிய பணியை மனத்திற்குத் தந்தார். புகழ்மின் என்ற சொல்லால் அவன் புகழையே ஓயாது பேசிக்கொண்டிருக்கும் பணியை நாவிற்குத் தந்தார். இதனையே நாவரசர் பெருமான் 'படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவிற் கொண்டேன் (திருமுறை 4.81-8 என்று கூறியுள்ளார். 'தொழுமின், பூப்புனைமின் என்பதால் உடலுக்கும் ஒரு பணியை வைத்தார். மனம், மொழி, மெய் என்ற மூன்றும்