பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாத்திரைப் பத்து-97 ஒரே வழியில் செல்வதால் நிலைகுலைய வழியில்ை என்பதைக் கூறியருளினார். . l எடுத்த இப்பிறப்பில் எதிர்வரும் இன்னல்களை இகழ்மின்' என்றார். இப்பொழுது வந்த, வரப்போகின்ற இன்னல்களை இகழவேண்டுமேயானால் மிகமிக உறுதியான மனத்திட்பம் வேண்டும். அத்திட்பம் உடையவர்களே வந்த வினையையும் வரப்போகும் வினையையும் இகழக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பர். இந்தத் திட்பத்தை எவ்வாறு பெறுவது? அதற்குரிய வழியைத்தான், மனம், மொழி, மெய் என்ற மூன்றிற்கும் ஒரே விதமான பணியைத் தரவேண்டும் என்பதன் மூலம் முதல் அடியில் கூறினாராயிற்று. 611. நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே பொற்பால் ஒப்பாம் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே நிற்பீர் எல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே 7 இப்பாடலில் புதிய கருத்து ஒன்றைப் பேசுகின்றார். புறப்படுவதற்கு ஒருப்படுமின் என்றெல்லாம் கூறிவந்தவர் இப்போது நிற்பார் நிற்க' என்று பேசுவது புதுமை. அனைவரும் புறப்படவில்லை; ஒருசிலர் நின்றுவிட்டனர் என்ற குறிப்பை உணர்த்துவதாகும் இது. அவர்களையும் 'உடனே புறப்படுங்கள்’ என்று சொல்லாமல், நிற்பார் நிற்க தங்கினவர்கள் தங்கிவிடட்டும்’ என்று கூறுகிறார். உடன் புறப்பட்ட அடியார்களைப் உளப்படுத்தி “நின்றுவிட்டவர்களைப்பற்றிக் கவலைப்பட்டுப் பயனில்லை இனி நாம் செல்வோம்’ என்கிறார். எங்கே போகிறோம் என்பதை உடன் வருபவர்களுக்கும் தங்கிவிட்டவர்களுக்கும்