பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருவாசகம் சில சிந்தனைகள்-5 உணர்த்தும் முறையில் "புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே என்று குறிக்கிறார். பொன்னடிக்குப் போகிறோம் என்ற சொற்களைக் கேட்டவுடன் தங்கிவிட்ட ஒருசிலர் புறப்படலாமா வேண்டாமா என்ற அரைமனத்துடன் எழுந்தும் எழாமலும் இருக்கின்ற நிலையைப் பார்க்கிறார் அடிகளார். அவர்களைப் பார்த்து, இந்த இரண்டாட்டம் வேண்டா. நின்றுவிடுவது என்ற எண்ணத்துடன் இருக்கும் நீங்கள் அனைவரும் உறுதியாக நின்றுவிடும் நிலையையே ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த முடிவைக்கூடக் காலந்தாழ்த்தாமல் எடுத்துவிடுங்கள் என்ற கருத்தில் தாழாதே நிற்பீர் எல்லாம், நிற்கும் பரிசே ஒருப்படுமின்’ என்கிறார். இத்தனையும் கூறிவிட்டு, நிற்பவர்களுக்கு ஒர் எச்சரிக்கையும் தருகிறார். இப்போது இந்த உலகம் சுகமானது; இதைவிடச் சிவபுரம் சென்று பெரிதாக எதனைப் பெற்றுவிடப்போகிறோம் என்று நினைப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடப்படுகிறது. இப்போது புறப்படாமல் தங்கிவிட்டுப் பின்னர்க் கழிந்த நூம் செயலுக்கு வருந்துவீர்களேயானால் மறுபடியும் பெருமானை அடைவது மிகக் கடினமானதாகும்’ என்கிறார். 612. பெருமான் பேரானந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள் அரு மால் உற்றுப் பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே திரு மா மணி சேர் திருக்கதவம் திறந்தபோதே சிவபுரத்துத் திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே 8 இறைவனுடைய அருளனுபவத்தில் தோய்ந்து இருக்கப் பெற்றவர்களே! திடீரென்று மயக்கமுற்று இந்நிலையிலிருந்து