பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாத்திரைப் பத்து-99 வழுவிவிடுவீர்களானால் பின்னர் "அம்மா” என்று அழுது பயனில்லை. சிவபுரத்தின் கதவுகள் திறப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் நாம், அது திறந்தவுடனேயே அவன் திருவடிகளைச் சென்று சேர்வோமாக என்றபடி, 613. சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே 9 'இறைவன் திருவடியைச் சென்று சேரக் கருதுபவர்களாகிய நீங்கள் உங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தி அத்திருவடிகளைச் சிந்திப்பீர்களாக அவ்வாறு செய்தால், உமையொரு பாகனின் திருவருளை ஆரப் பருகி அதிலேயே நிலைகொள்ளும் நிலை ஏற்படும். ஆதலால் பொய்யான இவ்வுலகத்திடைக் கிடந்து புரளாமல், (திருவடிமாட்டுப் போதல் புரிவீர்களாக என்றபடி 614. புரள்வார் தொழுவார் புகழ்வார் ஆய் இன்றே வந்து ஆள் ஆகாதீர் மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர் தெருள்வீராகில் இது செய்மின் சிவலோகக் கோன் திருப்புயங்கன் அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே - அந்தோ அந்தோ அந்தோவே 10 ஆன்மிக வாழ்க்கையில் ஒர் உறுதிப்பாட்டோடு இருந்தவர்கள்கூட ஏதோ ஒரு காரணத்தால் இடையில்