பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருவாசகம் சில சிந்தனைகள்-5 நின்றுவிடுதலும் கீழே இறங்கிவிடுதலும் இவ்வுலகில் உண்டு. அவ்வாறு இறங்குகிறவர்கள் இறையன்பும் உள்ளத்து உறுதியும் தம்மைவிட்டு நீங்கிவிட்டாலும் அகத்தே அன்பில்லாமல் புரள்தல், தொழுதல், புகழ்தல் ஆகியவற்றை உடலளவில் செய்து வருகின்றனர். இப்போலிகளைப் பார்த்து இப்பாடல் எச்சரிக்கை செய்கின்றதோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. இந்த விநாடியே முழுஈடுபாட்டுடன் வந்து அவன் திருவருளுக்கு ஆளாகாமல் அவன் திருவடிகளைப் புகழ்ந்தும், வீழ்ந்து புரண்டும், அவனைத் தொழுதும் பாடிக்கொண்டும் நிற்கின்றவர்களே! இவ்வழிகளைப் பின்பற்றி முன்னேறாமல் இதிலேயே இன்பம் கண்டு நின்றுவிடுவீர்களேயானால், அதாவது மருண்டு (மயக்கமெய்தி நின்று விடுவீர்களேயானால் உங்களை யாரும் மதிக்கமாட்டார்கள்; பாதிக் கிணறு தாண்டியவர்கள் என்று நகையாடுவர். நீங்கள் தெளிவடைவீர்களேயானால் அகத்து அன்போடு உள்ளத்து உறுதிப்பாட்டோடு இவற்றைச் செய்க. நீங்களே இவ்வாறு செய்யாவிடின் புயங்கனுடைய அருளை வேறு யார் பெறுவார்கள்? அந்தோ பரிதாபம்’ என்றபடி, இம்முறையில் முன்னேற்றமடையாமல் புறவழிபாட்டில் ஈடுபடுபவர்களைக் கண்டவுடன் அடிகளாருக்கு எல்லையற்ற பச்சாதாபம் உண்டாகிறது. அதனையே அந்தோ என்ற சொல்லை மும்முறை பயன்படுத்துவதன் மூலம் வெளிப்படுத்துகிறார். ওঁ ওঁ ওঁb