பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. திருப்படை எழுச்சி (பிரபஞ்சப் போர்) அடிகளாரின் உண்மையான வரலாற்றைச் சொல்லும் எந்த ஒரு நூலும் இதுவரைக் கிடைத்திலது. திருவாதவூரடிகள் புராணம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல், நம்பி திருவிளையாடல் போன்ற நூல்களில் அடிகளார் வரலாறு மிகப் பல மாறுபாடுகளுடன் காணப்பெறுகிறது. இதனைப் பாடியவர்கள் இறையன்பர்கள் என்பதுதவிர வரலாற்று உண்மை காணும் அறிவு படைத்தவர்கள் அல்லர். இவர்கள் மூவரும், அடிகளார் அமைச்சராக இருந்தார் என்ற ஒரு செய்தியைப் பாடிச்சென்றுள்ளனர். திருவாசகத்தில் பல அகச் சான்றுகள் இருப்பினும் அடிகளார் அமைச்சராக இருந்தார் என்பதற்குரிய எவ்வித நேரடிச் சான்றும் இல்லை. இந்த நிலையில் இந்த மூன்று ஆசிரியர்களையும் நம்புவதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. திருப்படையெழுச்சி என்ற தலைப்பில் காணப்பெறும் இந்த இரண்டு பாடல்களையும் படித்தால், இதனைப் பாடியவர் போர்த் திறத்தையும், போர் நுணுக்கத்தையும், படை செலுத்தும் முறையையும் மிக நன்றாக அறிந்திருந்தார் என்று நினைப்பதில் தவறே இல்லை. அவருடைய பழைய வாழ்க்கையில் இவற்றை அறிந்திருந்தாலன்றி இவ்வளவு விரிவாகப் l_J6ð) L— எழுச்சிபற்றிக் கூற இயலாது. அந்த அடிப்படையில் அடிகளார் அமைச்சுத் தொழில் பூண்டு, சிலகாலம் இருந்தார் என்று கொள்வதிலும் தவறில்லை. ஒயாது தம்மைக் கடையன், நாயினும் கடையன் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர், தாம் அமைச்சராக