பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருவாசகம் சில சிந்தனைகள்-5 இருந்ததை எக்காரணம் கொண்டும் தம் வாயால் பேசியிருக்கமாட்டார். ஆதலின், திருவாசகத்தில் அடிகளார் அமைச்சராக இருந்ததற்கு அகச் சான்று உறுதியாகக் கிடைக்காது. போர் இரு வகைப்படும். ஒன்று, தற்காப்புக்காகச் செய்யப்பெறும் போர். இதில் படை அணிவகுப்பு முறை ஒருவகை இரண்டாவது, வேறொரு நாட்டைத் தாமே படையெடுத்துச் சென்று போர்செய்து வெற்றி கொள்வது. இதில் படை அணிவகுப்பு முறை வேறு. அடிகளார் பாடிய திருப்படையெழுச்சி இரண்டாவது வகைப் போர்முறையைச் சேர்ந்ததாகும். அடிகளார் புறப்படச் சொல்லும் இப்படை எழுச்சியில் எதிர்த்து வருபவர்கள் இவர் அடையவேண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால், இடையே இருக்கும் அவர்களை வெல்லாமல் இவர் விரும்பிய இடத்திற்குச் செல்லமுடியாது. படைகள் தாங்கவேண்டிய ஆயுதம் முதலியவற்றை ஒரு பாடலில் கூறியபிறகு அடுத்த பாடலில் இப்படைகள் செல்லவேண்டிய அணிவகுப்பு முறை பேசப்பெறுகிறது. இப்படை முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் படைகள் எவை தெரியுமா? அவற்றை மாயப் படை என்றும், அல்லற் படை என்றும் அடிகளார் கூறியுள்ளார். இவை இரண்டுமே அடியார்களைப்போலப் பருவுடம்பு உடையவை அல்ல. வடிவு இல்லாமல், மிக நுண்மையாக இருந்துகொண்டு எதிர்பாராத நேரத்தில் தாக்கும் இயல்புடையவை மாயப் படை மாயப்படை முதலில் மதியை மயக்கி, அறிவை இழக்கச் செய்து, மனக் கலக்கத்தை உண்டாக்குகிறது. அடுத்து வரும் அல்லற் படை பெரும் துன்பத்தைச் செய்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், மாயப் படையின் இயல்பையும்